டிவிஎஸ் ஸ்போர்ட் சில்வர் அலாய் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் விற்பனை 20 லட்சம் யூனிட்டுகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில், ஸ்போர்ட் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் விற்பனை 20 லட்சம் யூனிட்டுகளை கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில், ஸ்போர்ட் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் ஸ்போர்ட் சில்வர் அலாய் எடிசன் என்ற பெயரில் இந்த மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. கிக்- ஸ்டார்ட் மாடலுக்கு ரூ.44,961 விலையிலும், எலக்ட்ரிக் ஸ்டார்ட் மாடல் ரூ.46,257 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் அலாய் எடிசன் பைக் இரண்டு புதிய வண்ணங்களில் வந்துள்ளது. பிளாக் சில்வர் மற்றும் வல்கனோ ரெட் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும். சாதாரண டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் கருப்பு வண்ண அலாய் வீல்கள் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த பைக்கில் சில்வர் வண்ண அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் 99.7சிசி ஏர் கூல்டு டியூராலைஃப் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.3 பிஎச்பி பவரையும், 7.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 95 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பைக்கில் டிவிஎஸ் நிறுவனத்தின் காப்புரிமை பெறப்பட்ட எக்கனோமீட்டர் தொழில்நுட்ப வசதி இடம்பெற்றிருக்கிறது. இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரண்டு காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரண்டு சக்கரங்களிலுமே டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து டிவிஎஸ் ஷோரூம்களிலும் புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் சில்வர் அலாய் எடிசன் மாடல் கிடைக்கும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சாதாரண ஸ்போர்ட் பைக் மாடலுடன் இந்த ஸ்பெஷல் எடிசனும் இனி விற்பனைக்கு கிடைக்கும்.

சாதாரண டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் இண்டிகோ ஸ்ட்ரீக், டீம் புளூ, மெர்குரி க்ரே, பிளேஸ் ரெட், டாஸ்லிங் ஒயிட், எலக்ட்ரிக் க்ரீன், பிளாக் சில்வர் மற்றும் வல்கனோ ரெட் ஆகிய 8 வண்ணங்களில் கிடைக்கும்.

ஆரம்ப ரக பைக் மார்க்கெட்டில் டிவிஎஸ் ஸ்போர்ட் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஹீரோ எச்எஃப் டான், ஹோண்டா ட்ரீம் சீரிஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








