டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிசன் மாடலானது கருப்பு- சிவப்பு மற்றும் கருப்பு - நீலம் என இரண்டு புதிய வண்
டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த ஸப்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் கிக் ஸ்டார்ட் - அலாய் வீல்கள் வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிசன் மாடலானது கருப்பு- சிவப்பு மற்றும் கருப்பு - நீலம் என இரண்டு புதிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். டிசைனில் மாற்றங்கள் எதுவும் இல்லை.

இந்த புதிய மாடலில் அகலமான இருக்கையும், வசதியாக பிடித்துக் கொள்வதற்கு ஏதுவாக கிராப் ரெயில் கைப்பிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னால் அமர்ந்து செல்பவர் அதிக சவுகரியத்தை உணர முடியும்.

புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர், ஸ்டைலான சைடு மிரர்கள், முப்பரிமாண அமைப்பில் டிவிஎஸ் பிராண்டு சின்னம் ஆகியவையும் இந்த புதிய மாடலுக்கு சிறப்பு சேர்க்கும் அம்சங்களாக இருக்கின்றன.

இந்த ரக பைக் மாடல்களில் முதல்முறையாக சிங்ரொனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் முதல் மாடலாகவும் டிவிஎஸ் ஸ்போர்ட் ஸ்பெஷல் எடிசன் மாடல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 99.7சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.3 பிஎச்பி பவரையும், 7.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது

இந்த பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் அலுமினியம் கிராப் ரெயில், க்ரோம் மஃப்ளர் கார்டு, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வருகை தந்தாலும், சாதாரண டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் மாடலும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ஸ்போர்ட் பைக் ரூ.40,088 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். மிக குறைவான பட்ஜெட்டில் சிங்ரொனைஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் புதிய வண்ணத் தேர்வுகள் இந்த பைக்கிற்கு நிச்சயம் நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications