புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ட்யூயல் டோன் கொண்ட புதிய வேரியண்ட் ஸ்டார்சிட்டி பிளஸ் பைக்கை ரூ.52,907 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் க்ரே மற்றும்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ட்யூயல் டோன் கொண்ட புதிய வேரியண்ட் ஸ்டார்சிட்டி பிளஸ் பைக்கை ரூ.52,907 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் க்ரே மற்றும் கருப்பு நிற டோனில் வெளியாகியுள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

இந்த பைக்கில் ஸிங்க்ரனைஸ்டு பிரேக்கிங் டெக்னாலஜி (எஸ்பிடி) என்ற புதிய தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளனர். இது கிட்டத்தட்ட காம்பினேஷன் பிரேக்கிங் சிஸ்டம் போல செயல்படும். டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டிவிஎஸ் ரேடியான் பைக்கிலும் இந்த தொழிற்நுட்பம் இடம் பெற்றுள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

இந்த எஸ்பிடி என்ற தொழிற்நுட்பம் ஒரு பிரேக்கை அழுத்தும் போது இரண்டு வீல்களிலும் பிரேக் பிடிக்கும். இதன்மூலம் பைக் பாதுகாப்பான சிறந்த பிரேக்கிங் வசதியை கொண்டிருக்கும். இதனால் பைக் ஓட்டுவதற்கே சிறப்பாக இருக்கும். 110 சிசி பைக் செக்மெண்டில் இந்த தொழிற்நுட்பத்தை தரும் ஒரே நிறுவனம் டிவிஎஸ்தான்.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

இந்த பைக்கின் இன்ஜினை பொறுத்தவரை பழைய பைக்கில் உள்ள அதே 109 சிசி எக்கோ த்ரெஸ்ட் ஏர்கூல்டு இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 8.3 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது நேரடியாக 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

தற்போது மார்க்கெட்டில் உள்ள சிறந்த பைக்குகளில் இந்த டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கும் ஒன்று. இந்த பைக் அறிமுகமானதில் இருந்து பல்வேறு அவார்டுகளை வாங்கி குவித்துள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஜெடி பவர் கஸ்டமர் சர்வேயில் முதலிடத்தை டிவிஎஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. மேலும் இந்த பைக் 2018ம் ஆண்டின் சிறந்த எக்கானமி பைக் எனும் பட்டத்தையும் பெற்றுள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

கடைசியாக இந்த பைக் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்டேட் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது இந்த பைக்கில், புதிய டிசைன் மொழி, கருப்பு மெட்டலில் பொறிக்கப்பட்ட டிவிஎஸ் என்ற வார்த்தை, அலாய் வீல் உள்ளிட்ட சில அம்சங்கள் பொருத்தப்பட்டது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

தற்போது வெளியாகியுள்ள புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் ஏற்கனவே கருப்பு மற்றும் சிவப்பு, கருப்பு மற்றும் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய வண்ணங்களில் வெளியாகி வருகிறது. அதனுடன் தற்போது க்ரே மற்றும் கருப்பு வண்ணம் இணைந்துள்ளது.

புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ட்யூயல் டோன் வேரியன்ட் பைக் அறிமுகம்

இந்த டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக் யமஹா சலுட்டோ ஆர் எக்ஸ், ஹோண்டா டிரீம் யூகா, பஜாஜ் டிஸ்கவர் 110 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக திகழ்கிறது. தற்போது டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக் 110 சிசி பைக் செக்மெண்டில் சிறந்த பைக்காக இருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள புதிய டுயல் டோன் வெர்ஷன் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லாமல்தான் வெளியாகியுள்ளது. விரைவில் டிவிஎஸ் நிறுவனம் அடுத்த புதிய தயாரிப்புகளை வெளியிட தயாராக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 25, 2018, 13:30 [IST]
English summary
TVS starcity plus dual tone variant launched. Read in Tamil
மேலும்... #டிவிஎஸ்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+