புத்தம் புதிய 110சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்துகிறது டிவிஎஸ்!!
பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இந்த கடும் சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் புத்தம் புதிய 110சிசி பைக்
அடுத்த வாரம் புத்தம் புதிய 110சிசி பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த பைக் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் பைக் மார்க்கெட்டில் ஹீரோ, டிவிஎஸ், பஜாஜ், ஹோண்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இந்த கடும் சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் புத்தம் புதிய 110சிசி பைக்கை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வரும் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிவிஎஸ் ரேடியான் என்ற பெயரில் இந்த புதிய பைக் வர இருக்கிறது. டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ், டிவிஎஸ் விக்டர் ஆகிய 110சிசி பைக் மாடல்கள் வரிசையில் இந்த புதிய மாடலும் இணைய இருக்கிறது.

டிவிஎஸ் ரேடியான் பைக் மாடலானது பிரிமியம் அம்சங்களுடன் வர இருக்கிறது. தோற்றத்தில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கை ஒத்திருந்தாலும், இது பிரிமியம் அம்சங்களை கொண்ட பைக் மாடலாக வருகிறது. டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டரில் இருப்பது போன்ற ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட இருக்கிறது.

சேட்டிலைட் நேவிகேஷன், விசேஷ செயலி மூலமாக ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை இந்த ஸ்மார்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வழங்கும். இந்த வசதி வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளிவந்த செய்திகளின்படி, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படி, அது 110சிசி மாடல் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த புதிய ரேடியான் பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் 109.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.4 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த பைக்கில் புதிய கிராஃபிக்ஸ் டிசைன் ஸடிக்கர் இடம்பெற்றிருப்பதால் அதிக கவர்ச்சியாக இருக்கும்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ரேடியான் என்ற பெயரில் 125சிசி கான்செப்ட் பைக் மாடலை டிவிஎஸ் அறிமுகம் செய்தது. ஆனால், அந்த பெயரில் தற்போது புதிய 110சிசி மாடலை டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது.
Source: Carandbike


Click it and Unblock the Notifications








