முன்னணி டூவீலர் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி! வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே இனிவரும் மாதங்களில் டூவீலர்களின் விற்பனை நிச்சயம் அதிகரிக்கும்.
இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே இனிவரும் மாதங்களில் டூவீலர்களின் விற்பனை நிச்சயம் அதிகரிக்கும். எனினும் தற்போதில் இருந்தே விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல முன்னணி டூவீலர் நிறுவனங்கள், போட்டி போட்டு கொண்டு தள்ளுபடி வழங்கி வருகின்றன. இந்திய டூவீலர் மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் தள்ளுபடி குறித்த முழுமையான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் சிடி 100
ரூ.9,000 வரை தள்ளுபடி
பஜாஜ் நிறுவனம் தங்களின், என்ட்ரி லெவல் சிடி 100 கம்யூட்டர்-செக்மெண்ட் (commuter-segment) பைக்கிற்கு, தற்போது ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடியை வழங்கி வருகிறது. ரூ.9,000 என்ற மிகப்பெரிய தள்ளுபடியின் மூலம், இந்த பைக்கின் விலை ரூ.41 ஆயிரத்தில் இருந்து ரூ.32 ஆயிரமாக குறைந்துள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 25 சதவீத தொகை தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பஜாஜ் சிடி 100 பைக், நல்ல மைலேஜ் தரக்கூடியது. இந்த பைக் மீதான நம்பகத்தன்மையும் அதிகம். இதுபோன்ற காரணங்களால் பஜாஜ் சிடி 100 பைக், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது.

டிவிஎஸ் ஜூபிடர்
ரூ.4,300 வரை தள்ளுபடி
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர். ஹோண்டா ஆக்டிவாவிற்கு அடுத்து, இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் இதுதான். இந்த ஸ்கூட்டருக்கு டெல்லி மற்றும் சென்னையில் உள்ள டீலர்ஷிப்களில் ரூ.4,300 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது கேஷ் டிஸ்கவுண்ட் ஆக ரூ.3,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர பேடிஎம் மொபைல் வாலட் மூலம் பர்சேஸ் செய்தால், கேஷ்பேக் ஆபராக ரூ.1,300 வழங்கப்படுகிறது. இதுதவிர பெங்களூருவில் உள்ள டீலர்ஷிப்களில், ஆக்ஸஸரிஸ்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

சுஸூகி அக்செஸ்
ரூ.7,000 வரை தள்ளுபடி
சுஸூகி நிறுவனத்தின் அக்செஸ் ஸ்கூட்டர், அதன் செக்மெண்டில் மிகவும் சிறப்பான முறையில் விற்பனையாகி வருகிறது. அக்செஸ் ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டரை சுஸூகி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் லான்ச் செய்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது அக்செஸ் ஸ்கூட்டருக்கு ரூ.7,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. சென்னை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோபொலிட்டன் நகரங்களை சேர்ந்த கார்ப்ரேட் நிறுவன ஊழியர்கள் இதுதவிர கூடுதலாக ரூ.2,500 தள்ளுபடியாக பெற முடியும்.

கவாஸாகி இஸட்1000 (Kawasaki Z1000)
ரூ.4.5 லட்சம் வரை தள்ளுபடி
மிகப்பெரிய அளவிலான விலை குறைப்புடன், மேட் இன் இந்தியா நின்ஜா 300 பைக்கை லான்ச் செய்ததன் மூலம், சமீபத்தில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது கவாஸாகி. தற்போது கவாஸாகியின் நேக்கட் ரக மாடல் பைக்கான இஸட்1000, அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரையிலான தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ஆனால் 2017ம் ஆண்டில் விற்பனையாகாமல் உள்ள ஸ்டாக்குகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும் என்பதும், ஒவ்வொரு டீலர்ஷிப்களிலும் வெவ்வேறு விதமாக தள்ளுபடி வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கிற்கு, கொல்கத்தா டீலர்ஷிப்களில் ரூ.2.5 லட்சம் வரையும், மும்பை டீலர்ஷிப்களில் ரூ.4.5 லட்சம் வரையும் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

ஹோண்டா நவி
ரூ.5,000 வரை தள்ளுபடி
ஆக்டிவா 110 ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட மோட்டோ-ஸ்கூட்டர் நவி. தற்போது ஸ்டாக்குகளை க்ளியர் செய்வதற்காக, ப்ரீ அப்டேட் நவி மோட்டோ-ஸ்கூட்டருக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்குகிறது ஹோண்டா. சென்னை, பெங்களூரு, டெல்லியில் உள்ள எந்த ஒரு மாணவருக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200
ரூ.5,000 வரை தள்ளுபடி
பஜாஜ் நிறுவனத்தின் ஒரே ஒரு ஃபுல்லி ஃபேர்டு (fully faired) பைக்கான இது, ரூ.5,000 வரையிலான தள்ளுபடியுடன் கிடைக்கிறது. எனினும் பல்சர் 200 பைக்கின் நேக்கட் ரக மாடல்தான் பிரபலமாக உள்ளது. ஒரு சில வாடிக்கையாளர்கள் மட்டுமே ஆர்எஸ் 200 பைக்கை வாங்குகின்றனர்.

இந்த சூழ்நிலையில், 2017 மாடல் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 பைக்கிற்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும். தள்ளுபடியுடன் கிடைக்க கூடிய இந்த பைக், மும்பை உள்பட ஒரு சில டீலர்ஷிப்களில் மட்டுமே தற்போது கிடைத்து வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 180
ரூ.7,000 வரை தள்ளுபடி
2018ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கின் ரெகுலர் வெர்ஷன் பைக்கிற்கு, கொல்கத்தாவில் உள்ள டீலர்ஷிப்களில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்குகளுக்கும், அதிகபட்சமாக ரூ.7,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இளைஞர்களை கவரக்கூடிய பல அம்சங்கள் இருப்பதால், அவர்கள் மத்தியில் அப்பாச்சி பைக்குகள் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றன.
Source: ACI
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








