ஒத்தை ஆளாக கெத்து காட்டும் ஆக்டிவா.. ஒரு ஸ்கூட்டரை வீழ்த்த முடியாமல் திணறும் ஹீரோ, பஜாஜ், டிவிஎஸ்

அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் பஜாஜ் சிடி 100 அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.

அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் பஜாஜ் சிடி 100 அபரிமிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 இரு சக்கர வாகனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 3,10,851 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மொத்தம் 3,35,595 ஆக்டிவா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அப்போதும் ஆக்டிவாதான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதன் விற்பனை 3,10,851ஆக சரிந்துள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

விற்பனை குறைந்திருந்தாலும், மீண்டும் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது ஆக்டிவா. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டுமல்லாது, அதற்கு முந்தைய ஜூன், ஜூலை மாதங்களிலும் ஆக்டிவாதான் முதலிடத்தில் இருந்தது. அதாவது தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக ஆக்டிவா முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது ஹீரோ ஸ்பிளெண்டர். இந்த கால கட்டத்தில் மொத்தம் 2,47,116 ஹீரோ ஸ்பிளெண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

இதன்மூலம் ஹீரோ ஸ்பிளெண்டருக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,42,431 ஹீரோ ஸ்பிளெண்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதன் விற்பனை 2,47,116ஆக அதிகரித்துள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

எனினும் ஹோண்டா ஆக்டிவா அதை விட அதிகமாக விற்பனையாகியிருப்பதால், ஹீரோ ஸ்பிளெண்டரால் மீண்டும் இரண்டாவது இடத்தைதான் பிடிக்க முடிந்துள்ளது. ஏனெனில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், ஹீரோ ஸ்பிளெண்டர் இரண்டாவது இடத்தில்தான் இருந்தது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

இதனிடையே 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் பட்டியலில், ஹீரோ எச்எப் டீலக்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 1,83,716 ஹீரோ எச்எப் டீலக்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,61,177 ஹீரோ எச்எப் டீலக்ஸ் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது. தற்போது அதன் விற்பனை 1,83,716ஆக அதிகரித்துள்ளது. எனினும் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை போல தற்போதும் ஹீரோ எச்எப் டீலக்சுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் பட்டியலில், 4வது இடத்தை பிடித்திருப்பது ஹோண்டா சிபி சைன். மொத்தம் 1,08,790 சிபி சைன் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

ஆனால் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 94,748 சிபி சைன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது. தற்போது அதன் விற்பனை 1,08,790ஆக அதிகரித்துள்ளது. என்றாலும் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை போல தற்போதும் சிபி சைனுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

இந்த பட்டியலில் ஹீரோ பேஷன் 5வது இடத்தை பெற்றுள்ளது. 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 82,681 பேஷன் விற்பனையாகியுள்ளது. ஆனால் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 93,003 பேஷன் விற்பனை செய்யப்பட்டிருந்தது. தற்போது அதன் விற்பனை 82,681ஆக சரிந்துள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

என்றாலும் 5வது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது ஹீரோ பேஷன். அதாவது 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எந்த பைக்குகள் எல்லாம் முதல் 5 இடத்தில் இருந்ததோ, அந்த பைக்குகள் எல்லாம் தற்போதும் நிலை மாறாமல் அப்படியே உள்ளன.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் பட்டியலில், பஜாஜ் சிடி 100 6வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 82,424 பஜாஜ் சிடி 100 விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 57,561 பஜாஜ் சிடி 100 மட்டுமே விற்பனையாகியிருந்தது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

தற்போது பஜாஜ் சிடி 100 மோட்டார் சைக்கிளின் விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதன்மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10வது இடத்தில் இருந்த பஜாஜ் சிடி 100 தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

இதனிடையே டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இந்த பட்டியலில் 7வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 79,223 ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 81,277 ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருந்தன.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

தற்போது அதன் விற்பனை 79,223ஆக சரிந்துள்ளது. என்றாலும் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை போலவே தற்போது அதே 7வது இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் தக்க வைத்து கொண்டுள்ளது. இந்த பட்டியலில், ஹீரோ கிளாமர் 8வது இடத்தை பிடித்துள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 74,097 ஹீரோ கிளாமர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 80,106 கிளாமர் விற்பனை செய்யப்பட்டிருந்தது. தற்போது அதன் விற்பனை சரிந்திருந்தாலும் 8வது இடத்தை கிளாமர் தக்க வைத்து கொண்டுள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களின் பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருப்பது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர். மொத்தம் 70,883 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 81,919 டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனை செய்யப்பட்டிருந்தது. அப்போது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் 6வது இடத்தில் இருந்தது. தற்போது அதன் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதால், 9வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை பிடித்திருக்கும் இரு சக்கர வாகனம் பஜாஜ் பல்சர். மொத்தம் 70,051 பஜாஜ் பல்சர் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 58,795 பல்சர் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆக்டிவாவை வீழ்த்த முடியாமல் திணறும் ஸ்பிளெண்டர்..

அப்போது பஜாஜ் பல்சர் 9வது இடத்தில் இருந்தது. தற்போது அதன் விற்பனை 70,051ஆக அதிகரித்துள்ளது. என்றாலும் ஒரு இடம் பின்தங்கி, 10வது இடத்தைய பஜாஜ் பல்சரால் பிடிக்க முடிந்திருக்கிறது. இந்த தகவல்களை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

Most Read Articles

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Two-Wheeler Sales August 2018; Activa Dominate Again. Read in Tamil
Story first published: Thursday, September 20, 2018, 12:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X