ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் யுஎம் நிறுவனம்!

Written By:

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் யுஎம் நிறுவனம்!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் நிறுவனம் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், வரும் 7ந் தேதி துவங்கும் ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் யுஎம் நிறுவனம்!

அதில், அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் 230சிசி க்ரூஸர் மோட்டார்சைக்கிள் இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மோட்டார்சைக்கிள்களின் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய மாடலை நிலைநிறுத்த யுஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் யுஎம் நிறுவனம்!

யுஎம் நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாக இருக்கும் என்பதும் பலரின் ஆவலைத் தூண்டி இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் யுஎம் ரெனிகேட் ஸ்போர்ட் எஸ் மோட்டார்சைக்கிளைவிட குறைவான விலையில் வர இருக்கிறது.

Recommended Video - Watch Now!
Auto Rickshaw Explodes In Broad Daylight
புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் யுஎம் நிறுவனம்!

யுஎம் நிறுவனத்தின் புதிய 230சிசி க்ரூஸர் மோட்டார்சைக்கிளில் இருக்கும் எஞ்சின் காற்று குளிர்விப்பு அமைப்பை பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் யுஎம் நிறுவனம்!

முடிந்தவரை விலையை மிக குறைவாக நிர்ணயிக்க யுஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ரூ.1.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

புதிய 230சிசி மோட்டார்சைக்கிளை களமிறக்கும் யுஎம் நிறுவனம்!

இந்த புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிளை தவிர்த்து, தோர் என்ற பேட்டரியில் இயங்கும் புதிய மின்சார மோட்டார்சைக்கிள் மாடலையும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய யுஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

English summary
UM Motorcycles is all set to bring new and exciting products at the Auto Expo 2018. Among the UM bikes at the auto expo, the bike manufacturer has revealed that a UM 230cc bike will debut at India's biggest automotive event. The new UM 230cc cruiser will rival Royal Enfield's 350cc motorcycles such as the Classic and the Bullet, which leads the segment with a massive market share.
Story first published: Tuesday, February 6, 2018, 10:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark