3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

இந்தியாவில், மூன்று புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வற்கு யுஎம் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது ரெனிகேட் மோட்டார்சைக்கிளின் கமாண்டோ, ஸ்போர்ட்ஸ் எஸ், கமாண்டோ க்ளாசிக் மற்றும் கமாண்டோ மோஜேவ் ஆகிய மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் தனது சந்தையை வலுப்படுத்தும் விதமாக இப்போது மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. யுஎம் நிறுவனத்தின் கமாண்டோ அயன் 300, கமாண்டோ எல்எக்ஸ் மற்றும் வேகாஸ் 300 க்ரூஸர் ஆகிய மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களை போன்றே, இந்த புதிய மூன்று மாடல்களும் ரெனிகேட் அடிப்படையிலான மோட்டார்சைக்கிள்கள்தான். ஆக்சஸெரீகள் மற்றும் டிசைன் அம்சங்களில் மாறுபாடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

கமாண்டோ அயன் 300, கமாண்டோ 300 எல்எக்ஸ் மற்றும் வேகாஸ் 300 ஆகிய மூன்று மோட்டார்சைக்கிள்களிலும் 279.5 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.8 பிஎச்பி பவரையும், 23 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். கார்புரேட்டரில் ட்யூனிங்கை பொறுத்து சற்றே வேறுபடலாம்.

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

விலையை சவாலாக நிர்ணயிக்கும் பொருட்டு, இந்த மூன்று மாடல்களுமே கார்புரேட்டர் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும். 2020ம் ஆண்டில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அமலுக்கு வரும்போது, ஃப்யூவல் இன்ஜெக்ஷன் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும்.

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

இதனிடையே, ரெனிகேட் மோட்டார்சைக்கிளின் மின்சார மாடலை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு யுஎம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக பைக்வாலே இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

3 புதிய க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களை களமிறக்குகிறது யுஎம் நிறுவனம்!

எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த சந்தையில் முன்கூட்டியே களமிறங்கும் வகையில், புதிய மின்சார மாடலை யுஎம் நிறுவனம் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்கள் அனைத்துமே உத்தரகாண்டில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படும்.

English summary
American motorcycle manufacturer UM Motorcycles is all set to introduce new products in the Indian market.
Story first published: Thursday, January 25, 2018, 18:10 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark