செகண்ட் ஹேண்ட் பைக்குகளை விற்க முடிவு செய்துள்ளது ஹார்லிடேவிட்சன்; விற்பனையை அதிகரிக்க புதிய யுக்தி
அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் பைக்குகளை விற்க முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான சோதனை முயற்சியையும் துவங்கியுள்ளது.
அமெரிக்க பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் பைக்குகளை விற்க முடிவு செய்துள்ளது. தற்போது அதற்கான சோதனை முயற்சியையும் துவங்கியுள்ளது

இது குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் : "கடந்த சில மாதங்களாக சில டீலர்ஷிப்களில் பயன்படுத்தப்பட்ட ஹார்லிடேவிட்சன் பைக்களை விற்பனை செய்துவருகிறோம். இது ஒரு சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதை இந்தியாவில் எங்களது அனைத்து டீசலர்களிடம் இந்த வசதியை கொண்டு வரவுள்ளோம்.

தற்போது இந்தியாவில் மொத்தம் 27 டீலர்கள் இருக்கின்றனர். 27வது டீலராக சென்னையில் முதன் டீலரை தற்போது திறந்துள்ளோம். பயன்படுத்திய வாகனங்களை செகண்ட் ஹேண்டாக விற்பனை செய்யும் முயற்சி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தான்.

புதிய ஹார்லிடேவிட்சன் வாங்கு முடியாதவர்களுக்கும் நாங்கள் வாய்ப்பு வழங்க நினைத்து தான் இதை துவக்கியுள்ளோம். அவர்களும் ஹார்லியில் ரைடு செய்த அனுபவத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டை காட்டிலும் 2018ல் எங்கள் நிறுவனம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. எங்கள் நிறுவனத்தை மக்கள் எளிதாக தொடர்பு கொள்ளும்படியும், அவர்களுக்கு அனைத்தையும் எளிமையாக்கும் படியும் தான் உழைத்து கொண்டிருக்கிறோம். இந்தாண்டும் எங்களது வளர்ச்சி நல்ல நிலையில் இருக்கும் என நம்புகிறோம்.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஷாப்பில் மால்களில் அப்பரல் ஸ்டோர்களை திறக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே இந்தாண்டு மூன்று இடங்களில் அப்பரல் ஸ்டோர்ஸ்களை புதுப்பித்துள்ளோம்.

ஹார்லிடேவிட்சன் நிறுவனத்தை பொருத்தவரை இந்தியா சிறந்த மார்க்கெட் தான் நாங்கள் இங்கு கூடுதலாக முதலீடு செய்ய தயராக வுள்ளோம். ஹரியானா மாநிலத்தில் எங்களது தயாரிப்பு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. அங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்கள் எல்லாம் இணைத்து பைக் தயாரிக்கப்படுகிறது. " என்றார்.

முன்னதாக சென்னையில் மெரினா ஹார்லிடேவிட்சன் என்ற ஹார்லிடேவிட்சன் நிறுவனத்தின் 27வது அதிகாரப்பூர்வ கிளை திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் ஹார்லிடேவிட்சன் நிறுவனத்தின் சார்பில் துவங்கப்படும் முதல் கிளையும் இதுதான்.

இந்த கிளையில் ஹார்லிடேவிட்சன் பைக்கின் விற்பனை மற்றும் சர்வீஸ் வழங்குகிறது. இன்றே 5 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. மொத்தம் இந்தியா முழுவதும் இந்தாண்டே 30 டீலர்களை துவங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் துவங்கப்பட்ட டீலரிடம் ஹார்லிடேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் 16 மாடல் பைக்குகளும் கிடைக்கும். மேலும் ஹார்லிடேவிட்சன் பைக்கிற்கான உதிரி பாகங்களும் கிடைக்கும்.
டிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








