பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய வண்ணம்; வெஸ்பா ரசிகைகளுக்கு கொண்டாட்டம்

பெண்களின் கனவு தேவதையான வெஸ்பா ஸ்கூட்டருக்கும மேலும் இரண்டு புதிய கலர்களுடன் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே உள்ள கலர் ஆப்ஷன்களுடன் இந்த கலர் ஆப்ஷன்களும் இணைகிறது.

By Balasubramanian

பெண்களின் கனவு தேவதையான வெஸ்பா ஸ்கூட்டருக்கும மேலும் இரண்டு புதிய கலர்களுடன் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே உள்ள கலர் ஆப்ஷன்களுடன் இந்த கலர் ஆப்ஷன்களும் இணைகிறது. இனி பெண்கள் டிரஸ்சிற்கு மேட்சாக வெஸ்பாவும் வந்து விட்டது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

பியாஜியோ நிறுவனத்தின் வெஸ்பா ஸ்கூட்டர் மக்கள் மனதை நீங்காத இடத்தை பிடித்து விட்டது. இந்த ஸ்கூட்டரின் கலர், ஸ்டைல், விண்டேஜ் லுக் என விலை அதிகமாக இருந்தாலும் பராவாயில்லை அந்த ஸ்கூட்டர் தான் வாங்க வேண்டும் என் மக்கள் மனதை கவர்ந்து விட்டது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

தற்போது வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 125 மற்றும் 150 ஆகிய பைக்குகள் புதிதாக 2 கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சி படுத்தப்பட்டது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

தற்போது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கலர்களுடன் மேட் மஞ்சள் மற்றும் மேட் சிவப்பு ஆகிய கலர்கள் தற்போது புதிதாக இணைந்துள்ளது

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

புதிய கலர் ஸ்க்கூட்டர்கள் எந்த விலை மாற்றமும் இன்றி பழைய ஸ்கூட்டர் விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதில் எஸ்எக்ஸ்எல் 150 வேரியன்ட் ஸ்கூட்டர் எக்ஸ் ஷோரூம் விலைப்படி ரூ 94,409 க்கும் எஸ்எக்ஸ் எல் 125 பைக் ரூ 88,313க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

இதில் வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 125 ஸ்கூட்டர் 125 சிசி இன்ஜினுடன் 9.9 பிஎச்பி பவரையும் 10.6என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 பைக்கை பொறுத்தவரை 150 சிசி இன்ஜினினுடன் 11.4 பிஎச்பி பவரையும், 11.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

வெஸ்பாவில் கலர்கள் குறைவாக இருக்கிறது என வாடிக்கையாளர்கள் பலர் கருதியதால் இந்த புதிய கலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கலர்கள் மூலம் ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

முன்னதாக பியாஜியோ நிறுவனம் வெஸ்பாவில் சிவப்பு கலர் ஸ்பெஷல் எடிசன் பைக்கை இந்தியாவில் வெளியிட்டர்னர். இதன் விலை 87,009 என விற்பனையானது. இந்த பைக் 125 சிசி வேரியன்டில் மட்டும் வெளியானது. இது பல உலக பிராண்டுகளுடன் கைகோர்த்து எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்பெஷல் எடிசனாக தயார் செய்யப்பட்டது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

பொதுவாக வெஸ்பா பைக்கில் கிளாசிக் மற்றும் மார்டன் எலெமென்ட்களில்இந்த பைக் டிசைன் செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இந்த பைக்கில் முன்பக்கம் 200 மி.மீ டிஸ்க் பிரேக், பின்பக்கம் 140மிமீ டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

சஸ்பென்சனை பொருத்தவரை முன்பக்கம் ஒரு ஆர்ம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் இரண்டு ஹைட்ராலிக் ஷாக்அப்சர்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பெண்களின் கனவு தேவதைக்கு மேலும் இரண்டு புதிய கலர்கள்

புதிய ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிப்பதுடன் வெஸ்பா வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆப்ஷன்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் புதிதாக அறிமுகமாகியுள்ள மேட் சிவப்பு மற்றும் மேட் மஞ்சள் நிறம் வாடிக்கையாளர்களை அதிகம் கவரும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Sunday, May 20, 2018, 8:30 [IST]
English summary
Vespa SXL 150 And 125 Now Available In New Colours.Read in Tamil
மேலும்... #பியாஜியோ #piaggio
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+