புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ராயல் என்பீல்டு பைக் விற்பனை முன்னெப்போதையும் விட கிடுகிடுவென அதிகரித்து கொண்டு வருவதை புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன.

By Arun

ராயல் என்பீல்டு பைக் விற்பனை முன்னெப்போதையும் விட கிடுகிடுவென அதிகரித்து கொண்டு வருவதை புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன. அப்படி ராயல் என்பீல்டு நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு என்ன வசியம் வைத்து மயக்குகிறது? என்பது குறித்த தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

உலகின் மிகப்பெரிய பைக் மார்க்கெட் இந்தியாதான். ஆனால் 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட பிரீமியம் பைக்குகளின் விற்பனை, இந்தியாவில் குறைவாகவே இருந்து வந்தது. அதாவது மொத்த பைக் விற்பனையில், வெறும் 5 சதவீதம் மட்டுமே பிரீமியம் பைக்குகள் விற்பனையாகி வந்தன.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ஆனால் சமீபகாலமாக பிரீமியம் பைக்குகளின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டில் மட்டும், 10 லட்சம் பிரீமியம் பைக்குள் விற்பனையாகியுள்ளன. இதில், 8 லட்சம் பைக்குகள், ராயல் என்பீல்டு நிறுவனத்தை சேர்ந்தவை.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ஆச்சரியம் அடைய தேவையில்லை. ஏனெனில் ராயல் என்பீல்டு பைக்குகள் மீதான இந்தியர்களின் காதல் அனைவரும் அறிந்ததுதான். வாங்கினால் ராயல் என்பீல்டு பைக்தான் என ஒற்றை காலில் நிற்பது இளைய தலைமுறையினர் மட்டும் அல்ல. வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் ராயல் என்பீல்டு கவர்ந்துள்ளது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ராயல் என்பீல்டை பைக் வைத்திருப்பவர்கள் அதனை புது மனைவி போல் பார்த்து கொள்கின்றனர். போகிற போக்கை பார்த்தால், வீட்டுக்கு ஒரு ராயல் என்பீல்டு பைக் நிற்க போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லலாம். என்ன மாய மந்திரம் செய்து, ராயல் என்பீல்டு பைக் அனைவரையும் வசீகரிக்கிறது? என்பதை இனி பார்க்கலாம்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

பழமை

ஒட்டுமொத்த உலகம் முழுவதும் தேடி பார்த்தாலும், நமக்கு கிடைக்கும் மிகவும் பழமையான பைக் நிறுவனம் ராயல் என்பீல்டுதான் (1901ம் ஆண்டு தொடங்கப்பட்டது). ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு (1903ம் ஆண்டு) முன்பாகவே ராயல் என்பீல்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அத்தகைய பழமையான டிசைன், பைக் ஆர்வலர்களை சுண்டியிழுக்கிறது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

நம்பிக்கை

ஆனால் சமீபத்திய ராயல் என்பீல்டு பைக்குகள் அனைத்தும், முன்பைக்காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த முறையில்தான் தயாரிக்கப்படுகின்றன. ராயல் என்பீல்டு பைக் தயாரிப்பில் ரோபோட்களும் கூட ஈடுபடுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

முன்பெல்லாம் ராயல் என்பீல்டு நிறுவனம் காஸ்ட் அயர்ன், AVL போன்ற இன்ஜின்களைதான் பயன்படுத்தி வந்தது. ஆனால் தற்போது அதைக்காட்டிலும் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் நவீனமான புதிய யூனிட் கன்ஸ்ட்ரக்ஸன் இன்ஜினை (UCE) பயன்படுத்த தொடங்கியுள்ளது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

2015ம் ஆண்டு வரை ராயல் என்பீல்டு நிறுவனம் தனது பைக்குகளுக்கு 1 வருடம்/10,000 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே வாரண்டி வழங்கி வந்தது. ஆனால் தற்போது கிளாசிக் ரேஞ்ச் பைக்குகளுக்கு 2 வருடம்/24,000 கிலோ மீட்டர் என்ற நிலையில் வாரண்டி வழங்கப்பட்டு வருகிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கே தங்கள் உற்பத்தி தரத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து விட்டது போல.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ஓட்டுவது எளிதானது

பழமையான ராயல் என்பீல்டு பைக்குகளில் வலது பக்கத்தில்தான் கியர் லிவர் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பெரும்பாலான பைக்குகளில் இடது பக்கத்தில்தான் கியர் லிவர் அமைந்திருக்கும். எனவே மற்ற பைக்குகளை ஓட்டியவர்கள், ராயல் என்பீல்டு பைக்குகளை ஓட்ட சிரமப்பட்டனர்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. மற்ற பைக்குகளை போல, தற்போது ராயல் என்பீல்டு பைக்குகளிலும் இடதுபுறம்தான் கியர் லிவர் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எலக்ட்ரிக் ஸ்டார்ட், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட வசதிகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்குகிறது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

முன்பு வலது பக்கம் கியர் லிவர் கொடுக்கப்பட்ட சமயத்தில், ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டுவது சிரமம் என்பதால், அதிகம் பேர் அதனை வாங்க மாட்டார்கள். தற்போது அந்த காலம் மலையேறி விட்டது. ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டுவது மிகவும் சுலபமாகி விட்டதால், மிக அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

வாங்கும் திறன் அதிகரிப்பு

முன்பு தொடங்கி தற்போது வரை மற்ற பைக்குகளை காட்டிலும் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் விலை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால் தற்போது மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. எனவே பைக் ஆர்வலர்கள் பலர், ராயல் என்பீல்டு ஷோரூம்களுக்கு படையெடுக்கின்றனர். ராயல் என்பீல்டு பைக்குகள் மிக அதிக அளவில் பிரபலமானதற்கு, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பும், ஒரு முக்கிய காரணம்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

அடிக்கடி வெளியாகும் அப்டேட் வெர்ஷன்

குறிப்பிட்ட கால இடைவெளிகளில், ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய புதிய தயாரிப்புகள் மற்றும் அப்டேட் வெர்ஷன்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது. முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடுகையில், புதிதாக அறிமுகம் செய்யப்படும் வெர்ஷனில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாவிட்டாலும் கூட, அதிக அளவு வாடிக்கையாளர்களை ஈர்க்கவே செய்கிறது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

இதன்மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒரு தயாரிப்பு மார்க்கெட்டில் எப்போதும் ப்ரெஷ் ஆகவே இருந்து கொண்டிருக்கிறது. ரெட்டிட்ச் எடிசன், ஹிமலாயன் ஸ்லீட், தி டெசர்ட் ஸ்ட்ரோம் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லாம்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

இப்போ வேற லெவல்!

பழமைக்காக ராயல் என்பீல்டு பைக்குகளை விரும்புவர்கள் ஒருபுறம் இருந்தாலும், நவீனத்தை எதிர்பார்ப்பவர்களும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார். அவர்களை இழந்து விடவும் ராயல் என்பீல்டு நிறுவனம் விரும்புவதில்லை. எனவே மிக வேகமாக தன்னை நவீனப்படுத்தி கொண்டு வருகிறது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

பேரலல்-டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்ட பைக்குகளை விற்பனை செய்யும் இந்தியாவின் ஒரே உற்பத்தியாளர் என்ற பெருமையை ராயல் என்பீல்டு நிறுவனம் மிக விரைவில் பெற இருக்கிறது. விரைவில் லான்ச் ஆகும் என எதிர்பார்க்கப்படும் இன்டெர்செப்டார் மற்றும் காண்டினென்டல் ஜிடி உள்ளிட்ட பைக்குகளில், புதிய 650 சிசி பேரலல்-டிவின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படவுள்ளது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வை இது காட்டுகிறது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ஒரு குடும்பமாக செயல்படும் ராயல் என்பீல்டு!

ராயல் என்பீல்டு பைக் வாங்கிவிட்டால், ஒரு புதிய குடும்பத்தில் இணைந்தது போன்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படுகிறது. ஆம், ராயல் என்பீல்டு பைக் வைத்திருப்பவர்கள், சகோதரத்துவத்துடன் ஒரு குழுவாக செயல்படுகின்றனர்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

ராயல் என்பீல்டு பைக் வைத்திருப்பவர்களை ஒருங்கிணைக்கும் விதமான நிகழ்ச்சிகளை ராயல் என்பீல்டு நிறுவனம் அவ்வப்போது நடத்துகிறது. ரைடர்மேனியா, ஹிமாலயன் ஒடிஸி, REயூனியன் போன்ற ஈவெண்ட்களை அதற்கு உதாரணமாக சொல்லாம்.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு, மீடியா மற்றும் பைக் ஆர்வலர்களிடம் இருந்து கிடைக்கும் கவனத்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் எப்போதும் புகழ் வெளிச்சத்திலேயே இருக்கிறது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

அதிகரித்த டீலர்ஷிப்கள்

முன்பெல்லாம் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அதிகமான டீலர்ஷிப்கள் இருக்காது. ஆனால் இந்தியாவில் தற்போது 367 நகரங்களில் மொத்தமாக 587 டீலர்ஷிப்களை ராயல்என்பீல்டு நிறுவனம் வைத்துள்ளது.

புது பொண்டாட்டியும் ராயல் என்பீல்டும் ஒன்னுதான்! வெச்ச வசியம் செம 'ஒர்க் அவுட்'

விருப்பம் போல் பைக்கை மாற்றலாம்

ராயல் என்பீல்டு பைக்கிற்கு தனித்துவமான லுக் கிடைப்பதற்காக, அதனை வைத்திருக்கும் உரிமையாளர்கள், ஆல்டர் செய்கின்றனர். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற லுக் கிடைக்க, ராயல் என்பீல்டு நிறுவனமே அதிகம் உதவி செய்கிறது. இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும், இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு, ராயல் என்பீல்டு அளவிற்கு உதவி செய்வதில்லை.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Why everyone’s buying Royal Enfield motorcycles: 10 BIG reasons! read in tamil.
Story first published: Monday, June 11, 2018, 14:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X