இந்தியாவில் 125சிசி அட்வென்ச்சர் ரக பைக்கை களமிறக்குகிறது யமஹா?
இந்தியாவில் அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், பட்ஜெட் நிறுவனங்கள் முதல் பிரிமீயம் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் வரை அட்வென்ச்சர் ரக பைக்குகளை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், தற்போது யமஹா நிறுவனமும் புதிய அட்வென்ச்சர் ரக பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது. புனே அருகில் யமஹா XTZ 125 அட்வென்ச்சர் ரக பைக் சாலை சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பைக்கின் ஸ்பை படங்களை ரஷ்லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

ஹீரோ நிறுவனம் விற்பனை செய்த இம்பல்ஸ் 150 பைக் மாடல்தான் குறைவான விலை அட்வென்ச்சர் ரக மாடலாக இருந்தது. ஆனால், அதற்கு மாற்றாக சற்று கூடுதல் சக்திவாய்ந்த எக்ஸ்பல்ஸ்-200 என்ற அட்வென்ச்சர் பைக் மாடலை ஹீரோ அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், ஹீரோ இம்பல்ஸ் 150 பைக் சாதாரண சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட இரட்டை பயன்பாட்டு அம்சம் கொண்ட பைக் மாடலாக இருந்தது. அதேவகையில், தற்போது யமஹா XTZ 125 பைக் விலை குறைவான அட்வென்ச்சர் மாடலாக வர இருக்கிறது.

இந்த புதிய பைக் 118 கிலோ மட்டுமே எடை கொண்டது. மிக இலகு எடை கொண்ட மாடலாக இருக்கும். இந்த பைக்கில் முன்புறத்தில் 21 அங்குல சக்கரமும், லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்தில் 18 அங்குல சக்கரம் மோனோ ஷாக் அப்சார்பர் அமைப்பும் உள்ளது.

இந்த பைக்கில் 124சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 12.5 பிஎச்பி பவரையும், 11.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா எக்ஸ்டிஇசட் 125 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கலாம். புதிய கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் மார்க்கெட்டையும் குறிபார்க்க வாய்ப்புண்டு.


Click it and Unblock the Notifications