யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது. மோட்டோ ஸ்கூட்டர் ரகத்திலான இந்த ஸ்கூட்டரின் படங்கள், விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம் கொடுத்துள்ளது. மோட்டோ ஸ்கூட்டர் ரகத்திலான இந்த ஸ்கூட்டரின் படங்கள், விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

கடந்த ஜனவரி மாதம் யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்திய டீலர்ஷிப் ஒன்றில் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருந்த படங்கள் வெளியானது. இதனால், பிப்ரவரியில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது பொய்த்து போனது.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

இந்த நிலையில், யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணத்தில் உள்ள வைஷ்ணவி யமஹா ஷோரூமில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் படங்கள் வெளியாகி இருக்கிறது.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

இந்தோனேஷியாவில் இருந்து இந்த ஸ்கூட்டரை இறக்குமதி செய்து பார்வைக்கு நிறுத்தி இருப்பதாகவும், விற்பனைக்கு இல்லை என்று அந்த டீலர்ஷிப் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் இப்போதைக்கு விற்பனைக்கு வராது என்று யமஹா வட்டாரத் தகவல்களும் தெரிவிக்கின்றன.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

கடந்த 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. யமஹா எம்டி மோட்டார்சைக்கிள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர் மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

மோட்டோ ரகத்தை இந்த ஸ்கூட்டரின் தோற்றம் பிரம்மாண்டமாக இருக்கிறது. வழக்கம்போல் யமஹா ஸ்கூட்டர்களின் கூர்மையான டிசைன் அம்சங்கள் இந்த ஸ்கூட்டரின் செயல்திறனுக்கு ஏற்ற தோற்றத்தை தருகிறது.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

இது யமஹா ஆர்15 வி3.0 பைக்கின் ஸ்கூட்டர் வெர்ஷனாக கூறப்படுகிறது. ஏனெனில், ஆர்15 வி 3.0 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 14.8 பிஎச்பி பவரையும், 14.4 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஸ்கூட்டரின் பாதுகாப்பு கருதி இந்த எஞ்சினின் பவர் குறைக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் இந்த ஸ்கூட்டரின் மிக முக்கிய அம்சம். 5.8 அங்குல எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட் கீ, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பிரிமியம் பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

யமஹா நிறுவனத்திடமிருந்து இந்தியர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மாடலாக யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் மாறி இருக்கிறது. ஆனால், இப்போதைக்கு இந்த புதிய ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் யமஹா வசம் இல்லை என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கருத்தாக இருக்கிறது.

யமஹா எராக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவில் தரிசனம்!!

இது பிரிமியம் ஸ்கூட்டர் மாடலாக இருப்பதால், ரூ.80,000 முதல் ரூ.90,000 வரையிலான ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 23, 2018, 14:11 [IST]
English summary
Yamaha Aerox 155 has spotted at a dealership in Visakhapatnam, Andhra. According to the reports, the scooter is not for sale and it has been imported from Indonesia to put on display at the showroom.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+