2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

Written By:

இரண்டு புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களின் கலவையாக வந்த யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

இந்த நிலையில், சந்தையில் பல புதிய மாடல்கள் வரவால் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியை போக்கும் விதமாக வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், ஃபேஸினோ ஸ்கூட்டரில் இரண்டு புதிய வண்ணங்களை கூடுதலாக சேர்த்துள்ளது யமஹா நிறுவனம்.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரை இனி கிளாமரஸ் கோல்டு மற்றும் டேப்பர் புளூ ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

புதிய வண்ணங்களில் வந்திருக்கும் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரின் முன்புற அப்ரான் பகுதியில், இடைவெளிகள் கொண்ட கருப்பு வண்ண பேனல்கள் கொடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் கவர்ச்சியை அளிக்கிறது.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் ரூ.54593 என்ற அதே எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய வண்ணங்களும் கிடைக்கும் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

புதிய வண்ண சீட் கவர் மற்றும் பின்புற அமர்ந்து செல்பவருக்கான பெரிய அளவிலான கிராப் ரெயில் கைப்பிடியும் இந்த மாடலில் முக்கிய அம்சமாக பார்க்க வைக்கிறது.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரில் 113சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. புளூ கோர் தொழில்நுட்ப அம்சம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7 பிஎச்பி பவரையும், 8.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் 5.2 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. 103 கிலோ எடை கொண்டது. லிட்டருக்கு 66 கிமீ மைலேஜ் தரும்.

2 புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் !!

புதிய யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களை பெற்றிருக்கிறது. தற்போது வந்துள்ள புதிய வண்ணக் கலவை நிச்சயம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவும் என்றால் மிகையில்லை.

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha India has introduced two new colour options for its stylish Fascino scooter. The Yamaha Fascino is now available in two new colours: Glamorous Gold and Dapper Blue.
Story first published: Saturday, April 7, 2018, 17:57 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark