யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. மோட்டோ ஜீபி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் யமஹா பைக்குகளை போன்று நீல வண்ணக் கலவையில், இந்த பைக் மோவிஸ

By Saravana Rajan

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

மோட்டோ ஜீபி பந்தயங்களில் பயன்படுத்தப்படும் யமஹா பைக்குகளை போன்று நீல வண்ணக் கலவையில் வருகிறது யமஹா ஆர்15 வி3.0 பைக். மேலும், முன்புறத்திலும் பின்புறத்தில் யமஹா மோட்டோஜீபி அணியின் மோவிஸ்டார் லோகோவும், ENEOS ஆயில் நிறுவனத்தின் லோகோவும் இடம்பெற்றிருக்கும்.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

யமஹா மோட்டோ ஜீபி பந்தய பைக்குகளின் சாயலை அப்படியே ஒத்திருக்கும். இதில், யமஹா அணியின் வாலண்டினோ ராஸி மற்ரும் மாவெரிக் வினால்ஸ் ஆகியோரின் எண்கள் மட்டுமே இடம்பெற்றிருக்காது. மற்றபடி அச்சு அசலான அம்சங்களுடன் வருகிறது.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர்களை தவிர்த்து மற்றபடி தொழில்நுட்ப அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் ஆர்15 வி 3.0 மாடலில் இருக்கும் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனயைும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்லிப்பர் க்ளட்ச் சிஸ்டம் மற்றும் முழுவதுமான டிஜிட்டல் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

இந்த பைக் மாடல் வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் இருக்கும் யமஹா மோட்டோ ஜீபி அணி பிரியர்களை வெகுவாக ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விரைவில் அறிமுகம்!

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் சாதாரண மாடல் ரூ.1.26 லட்சம் டெல்லி எக்ஸஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மோட்டோஜீபி எடிசன் கூடுதல் விலையில் வருகிறது. சில வெளிநாடுகளில் ஏற்கனவே மோட்டோ ஜீபி எடிசன் மாடல் விற்பனையில் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 22, 2018, 17:55 [IST]
English summary
Yamaha will be introducing the new YZF-R15 Version 3.0 MotoGP edition in India. According to reports from Autocar India, the Japanese two-wheeler manufacturer will launch the motorcycle sometime in August 2018.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+