யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மோட்டோஜீபி பந்தயத்தில் யமஹா அணி பயன்படுத்தும் எம்-1 ரேஸ் பைக்கின் ஸ்டிக்கர் அம்சங்கள் இந்த

By Saravana Rajan

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இளைஞர்களின் மனதை கவர்ந்த ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் யமஹா ஆர்15. இந்த பைக்கின் வி 3.0 மாடலில் இப்போது ஸ்பெஷல் எடிசன் மாடல் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடலில் மோட்டோ ஜீபி பந்தயத்தில் யமஹா நிறுவனம் பயன்படுத்தும் எம்-1 பந்தய பைக் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

நீல வண்ண பெயிண்ட் செய்யப்பட்டு, யமஹா மோட்டோஜீபி பைக் போன்ற கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது யமஹா மோட்டோஜீபி அணியின் இந்திய ரசிகர்களை வசீகரிக்கும் விதத்தில் இருக்கிறது. ஃபேரிங் பேனல்களில் யமஹா மோட்டோஜீபி அணிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களின் பிராண்டு சின்னங்கள், பெயர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

மோவிஸ்டார் லோகோ முத்தாய்ப்பாக தெரிகிறது. யமலூப் ஆயில் நிறுவனத்தின் பிராண்டு முத்திரையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பார்ப்பதற்கு யமஹா மோட்டோஜீபி பைக் போன்ற சாயலை பெற்றிருக்கிறது.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

ஸ்டிக்கர் வேலைப்பாடுகளை தவிர்த்து பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் இருக்கும் 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 18.7 பிஎச்பி பவரையும், 15 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த விசேஷ யமஹா மோட்டோஜீபி பெயிண்ட் வண்ணத்தில் மட்டுமின்றி, யமஹா ஆர்15 வி 3.0 பைக் மாடலானது நீலம்- கருப்பு மற்றும் சிவப்பு மற்றும் சாம்பல் என இரண்டு இரட்டை வண்ணக் கலவை தேர்வுகளில் கிடைக்கும். ஆக மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்கிறது.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய யமஹா ஆர்15 வி 3.0 மோட்டோஜீபி மாடலானது ரூ.1.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. சாதாரண மாடலைவிட ரூ.3,000 கூடுதல் விலையில் வந்துள்ளது. இந்த விசேஷ மாடலை யமஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவே முன்பதிவு செய்து வாங்க முடியும்.

யமஹா ஆர்15 வி 3.0 பைக்கின் மோட்டோஜீபி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!

முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாதம் முதல் யமஹா ஆர்15 மோட்டோஜீபி எடிசன் பைக் மாடல் டெலிவிரி கொடுக்கப்படும். இது லிமிடேட் எடிசன் மாடலாக இருக்குமென தெரிகிறது. ஆனால், எவ்வளவு எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறித்த தகவல் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, August 16, 2018, 14:12 [IST]
English summary
Yamaha YZF-R15 V3.0 Moto GP edition launched in India.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+