டுகாட்டி டயாவெல் பைக்கின் மீது ரூ.6.6 லட்சம் தள்ளுபடி... வாங்கப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார்?

டுகாட்டி நிறுவனத்தின் பிரபல மாடலான டயாவெல் மோட்டார்சைக்கிள், மலைக்க வைக்கும் அளவில் குறைக்கப்பட்ட விலையில் விற்பனைக் கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டுகாட்டி நிறுவனம், க்ரூஸர் ரக வாகன தயாரிப்பில் சிறந்து விளங்கி வருகின்றது. அந்தவகையில், அந்நிறுவனம் தயாரித்த டயாவெல் க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரூ. 16.15 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

இந்நிலையில், டயாவெல் மோட்டார்சைக்கிளில் ரூ. 6.6 லட்சம் வரை தள்ளுபடி செய்து விற்பனைக்கு கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அளவிலான விலை குறைப்பை டுகாட்டி நிறுவனம் மேற்கொள்ளவில்லை. மாறாக, பிக் பாய் டாய்ஸ் எனப்படும் செகண்ட் ஹேண்ட் வாகன விற்பனையாளர்கள் தான் மேற்கொண்டுள்ளனர்.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

பூஜ்ஜியம் கிலோ மீட்டர்கள்கூட ஓடாத அந்த பைக்கை, பிக் பாய் டாய்ஸ் நிறுவனம், செகண்ட் ஹேண்ட் பைக்காகதான் விற்பனைக்கு கொண்டுள்ளது. ஏனென்றால், இந்த பைக்கின் முதல் உரிமையாளராக பிக் பாய் டாய்ஸ் நிறுவனம் இருக்கின்றது. ஷோரூமில் காட்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளை வாங்கிய பிக் பாய் டாய்ஸ், அதனை விற்பனைச் செய்யும் விதமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

ஆகையால், இந்த பவர்புல் க்ரூஸர் ரக பைக் தற்போது ரூ. 11.99 லட்சத்திற்கு விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்தவகையில், தற்போது இந்த நிறுவனத்திடம் 20 டயாவெல் மோட்டார்சைக்கிள்கள் இருப்பு உள்ளன. இவையனைத்தும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

இந்த 20 யூனிட்களுடன், டீசல் வெர்ஷன் டுகாட்டி டயாவெல் நான்கு யூனிட்களும் உள்ளன. இவற்றையும் அந்த நிறுவனம் செகண்ட் ஹேண்டாகதான் விற்பனைச் செய்ய இருக்கின்றது. ஆனால், இறக்குமதி செய்யப்பட்ட இந்த டுகாட்டி பைக்குகளுக்கான, இந்தியாவில் வாரண்டி வழங்குவது மற்றும் சர்வீஸ் செய்வது எப்படி உள்ளிட்ட தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆகையால், இதுகுறித்த தகவல் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றன.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

டுகாட்டி நிறுவனம் அண்மையில்தான், இந்த டயாவெல் வரிசையில், 1260 என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது. அதேசமயம், இந்த பைக் அதீத நவீன தொழில்நுட்பத்தையும், மிகவும் கவர்ச்சியான தோற்றத்தையும் பெற்றிருந்ததால், இதற்கு 2019ம் ஆண்டிற்கான ரெட் டாட் விருது வழங்கப்பட்டது.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

ஆனால், இந்த பைக்கை அந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்திருந்தது. இந்த பைக்கில் பெரியளவிலான 1,262 சிசி, லிக்யூட்-கூல்ட், வி-டிவின் மோட்டார் சர்னிங் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிரம்மிக்க வைக்கும் விலை தள்ளுபடியை பெற்ற டுகாட்டி டயாவெல்: எவ்வளவு என தெரிந்தால் நிச்சயம் பைக்கை வாங்க துணிவீர்கள்...!

இது 159 குதிரை திறனை 9,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதேபோன்று, 129என்எம் டார்க்கை 7,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். இதில் டெஸ்மோடிரோமிக் வேரியபில் டைமிங் என்னும் புதிய பவர் பிளாண்ட் அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. டுகாட்டியின் டயாவெல் பைக் 1260 மற்றும் 1260 எஸ் ஆகிய இரு வேரியண்டில் சந்தையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2019, 18:56 [IST]
English summary
2018 Ducati Diavel Available At Rs 6.61 Lakh Discount.Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+