நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த புதிய 2019 மாடல் டோமினார் 400 பைக்கை (2019 Bajaj Dominar 400) நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு அனுப்பும் பணியை பஜாஜ் நிறுவனம் தொடங்கி விட்டது. குறிப்பாக மும்பை மற்றும் டெல்லியில் உள்ள ஒரு சில டீலர்ஷிப்களுக்கு புதிய டோமினார் 400 பைக் வந்து விட்டது.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளும் கூட தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பைக்கு அருகே உள்ள தானே நகரில் இயங்கி வரும் ஒரு டீலர்ஷிப்பில் நேற்று (மார்ச் 31) குறைந்தபட்சம் 3 பைக்குகளாவது டெலிவரி செய்யப்பட்டிருக்கும். வரும் நாட்களில் டெலிவரி பணிகள் துரிதமாக்கப்படவுள்ளது.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

பழைய மாடலை காட்டிலும் புதிய டோமினார் 400 பைக் அதிக சக்தி வாய்ந்ததாகவும், கூடுதல் வசதிகள் நிறைந்ததாகவும் உள்ளது. அப்டேட் செய்யப்பட்ட புதிய டோமினார் 400 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை 1.73 லட்ச ரூபாய் என ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மும்பையில் உள்ள ஒரு டீலரிடம் பெற்ற விலை பட்டியலின் அடிப்படையில், புதிய டோமினார் 400 பைக்கின் மும்பை ஆன் ரோடு விலை 2.18 லட்சம் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் உள்ளிட்ட கட்டணங்கள் அடங்கி விடும்.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

பழைய மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய 2019 டோமினார் பைக்கின் விலை சுமார் 15-20 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் விலைக்கு, ஏராளமான புதிய வசதிகள், அதிக பவர், அப்டேட் செய்யப்பட்ட இன்ஜின், புதிய எக்ஸாஸ்ட் ஆகியவை கிடைக்கிறது. எனவே கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவே 2019 டோமினார் 400 பார்க்கப்படுகிறது.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

2019 டோமினார் 400 பைக்கில், அதே 373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் எஸ்ஓஎச்சி (SOHC) செட் அப்பை பெற்றிருக்கும் பழைய டோமினார் 400 பைக்கை போல் அல்லாமல், புதிய டோமினார் 400 பைக்கானது டிஓஎச்சி (DOHC) செட் அப்பை பெற்றுள்ளது. இதன் மூலம் புதிய டோமினார் 400 பைக்கின் ரீபைன்மெண்ட் லெவல் (Refinement Level) கணிசமாக அதிகரித்துள்ளது.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

பழைய மாடல் டோமினார் 400 பைக்கில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள்தான் (Telescopic Forks) வழங்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய டோமினார் 400 பைக்கில் யுஎஸ்டி போர்க் (USD Fork) வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரியர் சஸ்பென்ஸன் செட் அப் முன்பு இருந்ததை போலவே உள்ளது. டயர்களை எடுத்து கொண்டால், அலாய் சைஸ் ஒன்று போலதான் உள்ளது. ஆனால் டிசைன் சற்று மாற்றப்பட்டுள்ளது.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

முன்பை காட்டிலும் மிகவும் சாப்ட் ஆன இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுபவருக்கு சௌகரியமான பயணத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் (Instrument Cluster) ஓட்டுபவருக்கு ஏராளமான தகவல்களை கொடுக்கிறது. ஹெட்லைட் செட் அப் முன்பு போலவே உள்ளது. ஆனால் எக்ஸாஸ்ட் சிஸ்டம் (Exhaust System) முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.

நீங்கள் நினைப்பதை விட குறைவான விலை... புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெலிவரி தொடங்கியது...

அங்கீகாரம் பெற்ற பஜாஜ் டீலர்ஷிப் ஒன்றில், புதிய டோமினார் 400 மற்றும் பழைய டோமினார் 400 பைக் மாடல்கள் குறித்து நிதிஷ் நியோ என்பவர் விவரிக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இதனிடையே பழைய மாடல் பஜாஜ் டோமினார் 400 பைக்கும் விலை பட்டியலில் பட்டியலிடப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பழைய மாடல் கைவிடப்படுமா? அல்லது புதிய மாடலுடன் இணைந்து விற்பனை செய்யப்படுமா? என்ற தெளிவான தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2019, 13:37 [IST]
English summary
2019 Bajaj Dominar 400 Deliveries Started. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+