மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய பஜாஜ் டோமினார் 400... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...
புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் மிகவும் மலிவான விலையில் களமிறங்குகிறது. எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்று டோமினார் 400 (Bajaj Dominar 400). இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் மாடலாக பஜாஜ் டோமினார் 400 திகழ்கிறது. இந்த சூழலில், டோமினார் 400 பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட 2019 வெர்ஷனை பஜாஜ் நிறுவனம் களமிறக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகி கொண்டுள்ளன.

இந்த செய்திகள் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி விட்டுள்ளன. இந்தியாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புதிய 2019 பஜாஜ் டோமினார் 400 பைக்கை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். ஆனால் அப்டேட் செய்யப்பட்ட செய்யப்பட்ட புதிய டோமினார் 400 பைக்கை பஜாஜ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை.

எனினும் இந்தியா முழுக்க உள்ள பஜாஜ் நிறுவன டீலர்கள், புதிய 2019 பஜாஜ் டோமினார் 400 பைக்கிற்கான முன்பதிவுகளை ஏற்று கொண்டுள்ளனர். புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே புதிய டோமினார் 400 பைக்கின் டெலிவரி வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த பைக்கின் விலை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன்படி புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.74 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. துல்லியமாக சொல்வதென்றால் 1,73,870 ரூபாய். இதுகுறித்து பஜாஜ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், த்ரஸ்ட்ஜோன் தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

வெளியே கசிந்துள்ள விலை விபரங்கள் உண்மை என்றால், பழைய மாடலை காட்டிலும், புதிய டோமினார் 400 பைக்கை கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல் என உறுதியாக கூற முடியும். மார்க்கெட்டை விட்டு வெளியேறவுள்ள, அதாவது தற்போதைய டோமினார் 400 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.62 லட்ச ரூபாய்.

இதனுடன் ஒப்பிடும்போது புதிய டோமினார் 400 பைக்கின் விலை சுமார் 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம். இந்த கூடுதல் 12 ஆயிரம் ரூபாய்க்கு, முன்பகுதியில் யூஎஸ்டி ஃபோர்க்ஸ், புதிய கலர் ஆப்ஷன்கள், புதிய எக்ஸாஸ்ட் சிஸ்டம், டிஓஎச்சி செட் அப் உடன் கூடிய அதிசக்தி வாய்ந்த இன்ஜின், பெரிய கூலிங் ரேடியேட்டர், அதிக தகவல்களை காட்டும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், புதிய அலாய் என பல்வேறு வசதிகளை பஜாஜ் நிறுவனம் வழங்குகிறது.

புதிய 2019 பஜாஜ் டோமினார் 400 பைக்கில், 373.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,650 ஆர்பிஎம்மில் 40 எச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

ஆனால் தற்போதைய மாடலில் உள்ள இதே இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 35 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க் திறனை மட்டுமே வழங்க கூடியது. அதாவது 5 எச்பி பவர் அதிகரிக்கிறது. பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதன் காரணமாக புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் எடை 2 கிலோ அதிகரிக்கிறது. பழைய மாடலின் எடை 182 கிலோ. புதிய மாடலின் எடை 184 கிலோ.

12 ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்தாலும் கூட போட்டியாளர்களான கேடிஎம் 390 டியூக் (ரூ.2.44 லட்சம்), பிஎம்டபிள்யூ ஜி310ஆர் (ரூ.2.99 லட்சம்), ஹோண்டா சிபி300ஆர் (ரூ.2.41 லட்சம்), டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 (ரூ.2.23 லட்சம்) 250 ட்யூக் ஏபிஎஸ் (ரூ.1.94 லட்சம்) உள்ளிட்ட மாடல்களுடன் ஒப்பிடுகையில் புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் மலிவானதுதான். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.


Click it and Unblock the Notifications








