2019 பஜாஜ் டோமினார் 400 பைக்குக்கான புக்கிங் தொடக்கம்!
பஜாஜ் நிறுவனத்தின் 2019 டோமினார் 400 பைக்குக்கான முன்பதிவினை அந்நிறுவனத்தின் டீலர்கள் இந்தியாவில் தொடங்கியுள்ளனர்.

இந்திய பைக் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், பட்ஜெட் மற்றும் விலையுயர்ந்த ரக பைக்குகளைத் தயாரித்து விற்பனைச் செய்து வருகிறது. அவ்வாறு, அந்த நிறுவனம் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் நார்மல் மற்றும் ஸ்போர்டி ரக பைக்குகளை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.
அதன்படி, அந்த நிறுவனம் அறிமுகம் செய்த டோமினார் 400 பைக் இளைஞர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்று படுஜோராக விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் டோமினார் 400 பைக்கை 2019ம் ஆண்டுக்கான புதிய நார்ம்ஸ்-க்கு ஏற்றவாறு மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, டோமினார் 400 பைக்கில் கேடிஎம் பைக்குகளில் இடம்பெற்றிருப்பதைப் போல முன்புற யூஎஸ்டி ஃபோர்க்கு மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிறுவப்பட்டுள்ளது.
புதுப் பொலிவுடன் வரவிருக்கும் இந்த பைக்கில் நவீன வசதியாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், கடிகாரம் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், டோமினார்400 பைக்கில் நிறுவப்பட்டுள்ள 373cc, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் 34.5 குதிரைத் திறனுடன், 35Nm டார்க்யு திறனை வெளிப்படுத்தும். இதைத்தொடர்ந்து, இந்த பைக்கில் இருந்த சில அசவுகரியங்களைக் குறைத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் அதிகளவில் ஏற்படும் அதிர்வுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் பஜாஜ் டோமினார் 400ன் பைக்கிற்கு முன்பதிவு தொடங்கியுள்ளனர். இதற்காக, ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இது நகரத்திற்கு-நகரம், டீலருக்கு-டீலர் என மாறுபட்ட முன்தொகையில் புக்கிங் செய்யப்படுகிறது.

புதிய அப்கிரேட் செய்யப்பட்ட டோமினார்400 பைக் இந்த மாதத்தின் இறுதிக்குள் ஷோரூம்களில் விற்பனை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக் ரூ. 1.63 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைச் செய்யப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications









