சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: அக்ஸசெரீஸ்களின் விலையும் அறிவிப்பு..!

ஹோண்டா நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2019 ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் டெலிவரியைத் தொடங்கியுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளிற்கான அக்ஸசெரீஸ்களின் விலை குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

ஹோண்டா நிறுவனம் தனது 2019 ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிளினை டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிளினை, கடந்த 2017ம் ஆண்டு ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் 'நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே' என்ற கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்திருந்தது.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

பாரம்பரியம் மற்றும் நவீன டிசைனுடன் இந்த மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததால், கண்காட்சியில் பலரின் கவனத்தை ஈர்த்தது. அவ்வாறு, இந்த மோட்டார்சைக்கிளின் முகப்பு பகுதியில் கொடுக்கப்பட்டிருந்த வட்டவடிவிலான எல்இடி ஹெட்லைட், எல்இடி இன்டிகேட்டர் மற்றும் குதிரை குளம்பு வடிவிலான கெய்டு லைட்டுகள் ஆகியவை பாரம்பரிய ரகத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த நவீன தொழில்நுட்பமாக காட்சியளித்தது. இதனால் இது அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

இதே வரவேற்பு இந்தியர்கள் மத்தியிலும் அந்த பைக்கின் அறிமுகத்திலிருந்தே நிலவி வருகிறது. அந்த வகையில், விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, திட்டமிட்ட உற்பத்தி இலக்கின்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு சிபி300ஆர் மோட்டார்சைக்கிளிற்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக ஹோண்டா நிறுவனம் தகவல் தெரிவித்தது.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

இந்நிலையில், இந்த புதிய 2019 ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிளினை டெலிவரி செய்யும் பணியை ஹோண்டா டீலர்கள் தொடங்கியுள்ளனர். அவ்வாறு, ரூ. 5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் இந்த மோட்டார்சைக்கிளுக்கான அக்ஸசெரீஸ்களும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

அவ்வாறு, இந்த மோட்டார்சைக்கிளிற்கான அக்ஸசெரீஸ்கள் பிரீமியம், புரடெக்ஷன், ஸ்டாண்டர்டு, ஸ்போர்ட்ஸ் ஆகிய ஆப்ஷன்களில் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், பிரீமியம் கிட்-இன் விலை ரூ.15.552 என்றும், புரடெக்ஷனின் விலை ரூ. 35.859 என்றும், ஸ்டாண்டர்ட் கிட்-இன் விலை ரூ. 16,666 என்றும், ஸ்போர்ட் கிட்-இன் விலை ரூ. 16,662 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான பாகங்கள் ரூ. 341 இல் இருந்து தொடங்கி ரூ. 15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிளில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸட்டர் மற்றும் வாகனத்தின் நிலைத்தன்மை குறித்து அளவிட்டு கூறும் ஐஎம்யூ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வாகன ஓட்டிக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில், இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், ஒற்றைச் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

இந்த 2019 ஹோண்டா சிபி300ஆர் மோட்டார்சைக்கிளினை டியூபியூலர் மற்றும் அழுத்தப்பட்ட ஸ்டீல் ஃப்ரேமினால் கட்டமைத்துள்ளனர். தொடர்ந்து, 41மிமீ இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

இந்த பைக்கில் 286சிசி கொண்ட லிக்யூடு கூல்ட் 4 வால்வ் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 30.4 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும், 27.5 என்எம் டார்க்கை திறனை 6,500 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சிபி300ஆர் பைக் டெலிவரியை தொடங்கியது ஹோண்டா: பாகங்களின் விலையும் அறிவிப்பு..!

இந்த பைக்கானது எக்ஸ்-ஷோரூமில் ரூ. 2.41 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக ரூ. 5 ஆயிரத்துடன் இந்த பைக்கின் முன்பதிவானது துவங்கப்பட்டது. இந்நிலையில், ஹோண்டா சிபி300ஆரின் அறிமுகத் தேதியினை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் இந்த பைக் டெலிவரி செய்யப்படும் என டீலர்கள் சார்பில் கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2019, 18:39 [IST]
English summary
2019 Honda CB300R Deliveries Start In India. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+