இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டிரையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா?

புத்தம் புதிய டிரையம்ப் மோட்டார் சைக்கிள் ஒன்று, இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டிரையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா?

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ப் (Triumph) நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் பல்வேறு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் 2019 டிரையம்ப் ஸ்பீட் ட்வின் (2019 Triumph Speed Twin) மோட்டார் சைக்கிள், இந்திய மார்க்கெட்டில் நாளை (ஏப்ரல் 24) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டிரையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் (2019 Triumph Street Twin) மோட்டார் சைக்கிளின் டிசைன் அம்சங்களைதான் 2019 டிரையம்ப் ஸ்பீட் ட்வின் மோட்டார் சைக்கிளும் பெற்றுள்ளது. இதில், எல்இடி டிஆர்எல்கள் உடனான வட்ட வடிவ ஹெட்லேம்ப் இடம்பெற்றுள்ளது. இது ரெட்ரோ லுக் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டிரையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா?

டிரையம்ப் நிறுவனத்தின் மற்றொரு முன்னணி மாடலான த்ரக்ஸ்டன் ஆர் (Triumph Thruxton R) மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருக்கும் அதே 1,200 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின்தான், டிரையம்ப் ஸ்பீட் ட்வின் மோட்டார் சைக்கிளிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 96 பிஎச்பி பவர் மற்றும் 112 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டிரையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா?

இதுதவிர டிரையம்ப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார் சைக்கிள் மாடலின் அதே சேஸிஸ்தான் டிரையம்ப் ஸ்பீட் ட்வின் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிரையம்ப் ஸ்பீட் ட்வின் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் 305 மிமீ ட்யூயல் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டிரையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா?

டிரையம்ப் ஸ்பீட் ட்வின் பைக்கில், ரோடு, ரெயின் மற்றும் ஸ்போர்ட் என்ற 3 ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர டிராக்ஸன் கண்ட்ரோல் மற்றும் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய வசதிகளும் டிரையம்ப் ஸ்பீட் ட்வின் மோட்டார் சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளது. 2019 ஸ்பீட் ட்வின் மோட்டார் சைக்கிளின் விலையை டிரையம்ப் நிறுவனம், ரூ.10.5 லட்சம் முதல் ரூ.11.5 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படும் டிரையம்ப் பைக் இதுதான்... விலை எவ்வளவு என தெரியுமா?

இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள 2019 டிரையம்ப் ஸ்பீட் ட்வின் மோட்டார் சைக்கிள் மாடலுக்கு டீலர்கள் ஏற்கனவே முன்பதிவுகளை ஏற்க தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கின் டெலிவரி அடுத்த மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 (Ducati Scrambler 1100) மோட்டார் சைக்கிள் மாடலுடன், 2019 டிரையம்ப் ஸ்பீட் ட்வின் போட்டியிடும்.

Article Published On: Tuesday, April 23, 2019, 19:07 [IST]
English summary
2019 Triumph Speed Twin Launch Details, Expected Price. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+