புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை எஃப்இசட் மற்றும் எஃப்இசட்- எஸ் பைக் மாடல்கள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதன் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை காணலாம்.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய இளைஞர்களை வெகுவாக கவர்ந்த மாடல்களில் ஒன்று யமஹா எஃப்இசட் பைக். இந்த மாடலை முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது யமஹா நிறுவனம். யமஹா எஃப்இசட் வி3.0 மற்றும் எஃப்இசட் - எஸ் வி3.0 என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய மாடல்கள் வடிவமைப்பு, எஞ்சின், தொழில்நுட்பம் என அனைத்தும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா எஃப்இசட் வி3.0 மாடலில் முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு மேலும் முறுக்கேற்றப்பட்ட நிலையில் மிரட்டுகிறது. புதிய இருக்கை அமைப்பபு, இன்டிகேட்டர்கள் மற்றும் புகைப்போக்கி கவர் உள்ளிட்டவையும் புதிது.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

பழைய மாடலில் இருந்த அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் தற்போது கூடுதல் விபரங்களை பெறும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர, வடிவமைப்பில் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் கவர்ச்சிகர அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக்கில் இருக்கும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 149சிசி எஞ்சின் அதிகபட்சமாக 13.2 பிஎச்பி பவரையும், 12. 8 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்்திில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் இடம்பெற்றிருக்கிறது. முக்கிய விஷயமாக, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்ததுடன் வந்துள்ளது.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக்கிற்கு ரூ.95,000 விலையிலும், எஃப்இசட் - எஸ் வி3.0 மாடல் ரூ.97,000 எக்ஸ்ஷோரூம் விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ்160 ஆகிய பைக் மாடல்களுடன் மோதும்.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு புதிய பைக் மாடல்களுக்கும் யமஹா டீலர்களில் முன்பதிவு ஏற்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம்!

யமஹா எஃப்இசட் வி3.0 பைக் மாடல்கள் மட்டுமின்றி, யமஹா எஃப்இசட் 25 மற்றும் யமஹாபேஸர் மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. எஃப்இசட் 25 மாடலுக்கு ரூ.1.33 லட்சம் விலையும்,, பேஸர் பைக்கிற்கு ரூ.1.43 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 21, 2019, 13:42 [IST]
English summary
2019 Yamaha FZ V3.0 Launched In India
மேலும்... #யமஹா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+