2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்காவின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

ஹோண்டா நிறுவனத்தின் அடுத்த புது வரவாக 2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக் அறிமுகமாகவுள்ளது. இதன் சிறப்பம்ச தகவல்கள் ஏற்கனவே சில இணையத்தில் வெளியான நிலையில் இந்த சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்காவின் மேலும் சில பிரம்மிப்பூட்டும் விஷயங்கள் வெளியாகியுள்ளன.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கில் பேரலல் ட்வின் அமைப்புடைய இரண்டு சிலிண்டர்கள் கொண்ட இன்ஜினை கொண்டுள்ளது. 1084ccயில் கச்சிதமாகவும், இன்னும் அதிகப்படியான தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டில் வர இருக்கும் இந்த பைக்குடன் இதன் அட்வென்ஜர் ஸ்போர்ட்ஸ் வெர்சனும் அறிமுகமாகவுள்ளது.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

ஹோண்டா சிஆர்எஃப் 1100எல் அட்வென்ஜர் ஸ்போர்ட்ஸ் பைக்கானது இலகுவான வடிவம் மற்றுன் 25 லிட்டர் பெட்ரோ்ல டேங்க் என ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கில் இருந்து வேறுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அட்வென்ஜர் ஸ்போர்ட்ஸ் மாடலில் ஓட்டுனர் முகத்தில் காற்று அறைவதை தவிர்க்க விண்ட்ஷீல்டு கண்ணாடியும், என்ஜினுக்கு பாதுகாப்பை தரும் அடித்தட்டும் பொருத்தப்பட்டுள்ளன.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

அதேபோல் ஹோண்டா ஆப்பிரிக்கா பைக்கின் உடலை பாதுகாக்கும் வடிவில் சில முக்கிய அம்சங்களுடன் வடிவமைத்துள்ளனர். தற்போதைய மாடலை காட்டிலும், புதிய ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் எஞ்சின் 7 சதவீதம் அதிகமான டார்க் திறனையும், 6 சதவீதம் அதிகமான பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும்.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

ஹோண்டா ஆப்பிரிக்காவின் இன்ஜின் அமைப்பு இலகுவாகவும், சிறப்பான காற்று மற்றும் எரிபொருள் செலுத்து அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

இந்த பைக்கின் 1084cc என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்மில் 101 பிஎச்பி பவரையும், 6250 ஆர்பிஎம்மில் 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் என்ஜின் மெல்லிய அலுமினிய தகடினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை காட்டிலும் 2.5 கிலோ எடை குறைவாகவும் மாற்றப்பட்டுள்ளது.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

எலக்ட்ரானிக் பாகங்கள் அனைத்தும் முற்றிலுமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பைக்கின் இழுவை கட்டுப்பாடு அமைப்பு IMUவால் உருவாக்கப்பட்டுள்ளது. மூன்று கியர் அமைப்பை தாண்டி ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்காவில் கூடுதலாக வீலிங் செய்வதற்கான ஒரு கியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீலிங் செய்வதற்கான கட்டுபாட்டு அமைப்பை முற்றிலும் ஆஃப் செய்துவிட முடியும்.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள தொடுத்திரையின் மூலமாக விருப்பமான பாடல்களை ப்ளூடூத் உதவியுடன் கேட்க முடியும். இதன் டேங்கின் கொள்ளளவு 18.8 ஆகும். 226 கிலோ கெர்ப் எடை கொண்டது. டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க சக்கரம் 21 இன்ச்சிலும் பின்பக்க சக்கரம் 18 இன்ச்சிலும் டியுப் டயரினால் உருவாக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து சீட்டின் உயரம் 850-870 மில்லிமீட்டராக உள்ளது.

2020 ஹோண்டா சிஆர்எஃப்1100எல் ஆப்பிரிக்கா பைக்கின் பிரம்மிப்பூட்டும் தகவல்கள் இதோ!

அடுத்த ஆண்டு பல்வேறு நாடுகளில் 2020 மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Details of 2020 Honda CRF1100L Africa Twin Officially Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X