மூன்று புதிய வண்ணத் தேர்வுகளில் கவாஸாகி நின்ஜா 400 பைக் அறிமுகம்!
கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் மூன்று புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் 400சிசி ரக பைக் மாடல்களில் மிகவும் பிரிமீயம் மாடலாக கவாஸாகி நின்ஜா 400 பைக் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. செயல்திறன் அடிப்படையில் கேடிஎம் ஆர்சி 390 பைக்கிற்கு நேரடி போட்டியாக இருந்தாலும், விலை மற்றும் எஞ்சின் தொழில்நுட்ப அம்சங்களில் இது மிகவும் பிரிமீயம் மாடலாக கூறலாம்.

இந்த பைக் இந்தியாவில் கேஆர்டி எடிசன் என்ற விசேஷ பச்சை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில், ஜப்பானில் கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் மூன்று புதிய வண்ணத் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கருப்பு - சாம்பல் மற்றும் மஞ்சள் ஸ்டிக்கர் அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட வண்ணத்திலும், கருப்பு- வெள்ளை மற்றும் சிவப்பு அலங்கார ஸ்டிக்கர்களுடன் மற்றொரு வண்ணத்திலும், கவாஸாகியின் கேஆர்டி எடிசன் என்ற பாரம்பரிய பச்சை வண்ணத்தில் சிறிய மாறுபாடுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த புதிய வண்ணங்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக, ஃபேரிங் பேனல்களில் தேன்கூடு வடிவிலான கிராஃபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்களும், சக்கரங்களில் சிவப்பு வண்ண ஸ்டிக்கரும் மிக கவர்ச்சியாக தெரிகிறது.

இந்த புதிய வண்ணத் தேர்வுகள் அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் கவாஸாகி நின்ஜா 400 பைக்கை வாங்க காத்திருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமையும்.

புதிய வண்ணத் தேர்வுகள் தவிர்த்து, கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 398 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.5 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தவிரவும், ஸ்லிப்பர் க்ளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணஐக்கப்ப்டடு இருக்கிறது.

கவாஸாகி நின்ஜா 400 பைக்கில் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் கட்டமமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் 41 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் யூனி டிராக் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன.

முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. இதன் ரகத்தில் பெரிய அளவிலான டிஸ்க் பிரேக்குகளை பெற்றிருக்கிறது. பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. நிஸான் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








