சக்தி வாய்ந்த நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் முக்கிய விபரங்கள்!
சக்தி வாய்ந்த நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் பைக்கை கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதுகுறித்த முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஜப்பான் நாட்டு நிறுவனமான கவாஸாகி அதன் புகழ்வாய்ந்த நிஞ்சா மாடலின் இசட்எக்ஸ்-10ஆர் வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கிற்கு ரூ. 13.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனம் உள்நாட்டிலேயே வைத்து அசெம்பிஸ் செய்துள்ளது.

தற்போது அறிமுகமாகியிருக்கும் இந்த பைக், முந்தைய மாடலைக் காட்டிலும் ரூ. 1.20 லட்சம் அதிகமாக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதற்கு முந்தைய மாடல் ரூ. 12.80 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகின்றது.

இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவிற்கு சிகேடி (Completely Knocked Down) என்பதன் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச தரத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருப்பதாக கவாஸாகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளுக்கான புக்கிங் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அது தற்போது வரை நீடித்து வருகின்றது. இந்நிலையில்தான், இன்று (மே 21) கவஸாாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர் விற்பனைக்கு அறிமுகமாகியிருக்கின்றது. மேலும், இந்த பைக்கை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஜீன் மாதத்தின் மத்தியில் டெலிவரி செய்யப்பட உள்ளது.

தற்போது அறிமுகமாகியிருக்கும் இந்த பைக், முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாகவும், சிறப்பான தோற்றத்தைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய பைக்கை முழுக்க முழுக்க அழகுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மிகப்பெரிய மாற்றமாக இந்த பைக்கில் 998சிசி திறன் கொண்ட இன்-லைன் 4 சிலிண்டர், லிக்யூட் கூல்ட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 210 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ஆனால், முந்தைய மாடல் 200.2 பிஎச்பி பவரை மட்டும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில் புது விஷயமாக ஃபிங்கர்-பாலோவர் வால்வ் ஆக்டுவேஷன் இணைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இந்த பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்புகளாக, முழுவதுமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான 43எம்எம் ஷோவா இன்வெர்டட் ஃபோர்க் முன்பக்கத்திலும், 120எம்எம் கொண்ட டிராவல் மற்றும் பேக்-லிங்க் கேஸ் சார்ஜட் மோனோசாக் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களாக முன்பக்கத்தில் ப்ரெம்பா எம்50 மோனோபிளாக் காலிபர்ஸ் அமைப்பு கொண்ட 330எம்எம் ட்யூவல் செமி ப்ளோட்டிங் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் சிங்கிள் பிஸ்டன் அமைப்பு கொண்ட 220எம்எம் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், எலக்ட்ரானிக் டிராக்ஷன் கன்ட்ரோல், கார்னரிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் த்ரோட்டில் வால்வலஸ், எஞ்ஜின் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், இந்த பைக்கில் மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த லிட்டர் கிளாஸ் சூப்பர் ஸ்போர்ட் செக்மெண்ட் பைக்கில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பிரத்யேகமான பைக் இந்தியாவில் சுஸுக ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000, டுகாட்டி பனிகேல் வி4, யமஹா ஒய்இசட்-ஆர்1, அப்ரில்லா ஆர்எஸ்வி4 மற்றும் அப்கமிங் பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்ஆர் பைக்குகளுடன் போட்டியிடும்.


Click it and Unblock the Notifications








