இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ரக ஸ்கூட்டரை கிம்கோ நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

தைவான் நாட்டை சேர்ந்த கிம்கோ நிறுவனம் பெட்ரோல் மற்றும் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவில் 22 மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி 22 கிம்கோ என்ற பெயரில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க உள்ளது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

அண்மையில்தான் 22 மோட்டார்ஸ் நிறுவனம் ஃப்ளோ என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. எனினும், கிம்கோ நிறுவனத்தின் கூட்டணியில் கழற்றி மாட்டும் பேட்டரி வசதியை தனது மின்சார ஸ்கூட்டர்களில் 22 மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

இந்த சூழலில், 22 கிம்கோ கூட்டணி நிறுவனம் பல புதிய மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், மின்சார ஸ்கூட்டர் மட்டுமின்றி, பெட்ரோலில் இயங்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டரையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

தனது சமூக வலைத்தள பக்கங்களில் இந்தியாவுக்கான புதிய மேக்ஸி ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டு இருக்கிறது. அதில், 300சிசி ஸ்டிக்கர் இருப்பதால், பிரிமீயம் ரக மாடலாக வர இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

டீசரின்படி, இந்தியாவில் தனது எக்ஸ்-டவுன் 300ஐ என்ற மேக்ஸி ஸ்கூட்டரை கிம்கோ நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் ஓர் முழுமையான மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலாக இந்தியாவில் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

இந்த ஸ்கூட்டரில் 276 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 24.5 பிஎஸ் பவரையும், 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். எஞ்சினுக்கு தக்கவாறு ஸ்கூட்டரும் மிக பிரம்மாண்டமான தோற்றத்துடன் கவர்கிறது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

பெரிய விண்ட்ஷீல்டு அமைப்பு, அப்ரான் அமைப்பு இந்த ஸ்கூட்டருக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் 12.5 லிட்டர் எரிபொருள் கலன் பொருத்தப்பட்டு இருக்கிறது. வசதியான பெரிய இருக்கைகள் மற்றும் அதிக வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

இந்த ஸ்கூட்டரில் 37 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 13 அல்லது 14 அங்குல விட்டமுடைய சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

முன்சக்கரத்தில் மூன்று காலிபர்கள் கொண்ட 260 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் இரட்டை காலிபர்கள் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டரை களமிறக்குகிறது 22 கிம்கோ நிறுவனம்!

இந்த ஸ்கூட்டர் மிகவும் பிரிமியமான ஸ்கூட்டர் போன்ற அம்சங்களை பெற்றிருக்கிறது. ரூ.2 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2019, 12:57 [IST]
English summary
22 motors and Kymco alliance has announced to launch electric and petrol powered scooter models in India soon.
மேலும்... #22 கிம்கோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+