உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

மின்சார இருசக்கர வாகனத்திற்கான ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் தொழில்நுட்பத்திற்கு இந்தியாவை சேர்ந்த 22 மோட்டார்ஸ் காப்புரிமை பெற்றுள்ளது.

உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

சரிவான சாலைகள் மற்றும் மலைச்சாலைகளில் செல்லும்போது வாகனம் பின்னோக்கி செல்வதை ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பம் தடுக்கிறது. தற்போது கார்களிலும், எடை அதிகம் கொண்ட விலை உயர்ந்த பைக்குகளிலும் இந்த ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

இந்த நிலையில், மின்சார இருசக்கர வாகனத்திற்கான ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை ஹரியானாவை சேர்ந்த 22 மோட்டார்ஸ் என்ற மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு உலக அளவில் காப்புரிமை பெற்றிருக்கிறது.

உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

22 மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஃப்ளோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்த ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பம் கொடுக்கப்பட இருக்கிறது. இதன்மூலமாக, சரிவான சாலைகளிலும், போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது வாகனம் பின்னோக்கி நகர்வதை இந்த தொழில்நுட்பம் தடுக்கும்.

உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

இந்த தொழில்நுட்பம் குறித்து 22 மோட்டார்ஸ் இணை நிறுவனர் பிரவீண் கார்ப் கூறுகையில்," மலைச்சாலைகளில் வாகனம் ஓட்டும்போது அதிக ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது. நான்கு சக்கர வாகனங்களில் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அனைவருக்கும் பாதுகாப்பு என்பது பொது உரிமை.

உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

இதனை மனதில்வைத்துதான் எங்களது பொறியாளர்கள் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியை உருவாக்கி இருக்கின்றனர். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது எங்களது நிறுவனத்தின் கொள்கையாக வைத்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

MOST READ: மாருதி சுஸுகி ஏஜிஎஸ்: அனைத்து இந்தியர்களுக்கும் ஓர் புரட்சிகரமான ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்

உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் தொழில்நுட்பம் தவிர்த்து, 22 ஃப்ளோ ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டிராக் என மூன்று டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட இருக்கிறது. வண்டியை எளிதாக பின்னோக்கி செலுத்துவதற்கு ரிவர்ஸ் மோடு பயன்படும்.

உலகிலேயே முதல்முறையாக ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதியுடன் வரும் மின்சார ஸ்கூட்டர்!

க்ரூஸ் கனட்ரோல் மூலமாக சீரான வேகத்தில் ஆக்சிலரேட்டர் கொடுக்காமலேயே வண்டியை இயக்க முடியும். பஞ்சர் மற்றும் பழுது ஏற்படும் சமயங்களில் இந்த ஸ்கூட்டரில் இருக்கும் டிராக் மோடில் வைத்து ஸ்கூட்டரை 3 கிமீ வேகத்தில் இயக்க முடியும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது. தள்ளிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

Most Read Articles
English summary
Haryana based 22Motors has developed hill assist feature for electric two-wheelers and also secured patent for the same.
Story first published: Thursday, May 30, 2019, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X