நடப்பாண்டில் களமிறங்கப்போகும் ரெட்ரோ பைக், ஸ்கூட்டர்கள் இவைதான்... விலை ரொம்ப சீப்...
ஜாவா பெராக், ராயல் என்பீல்டு ஸ்கிராம்ப்ளர் போன்ற 5 புதிய மலிவு விலை ரெட்ரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் நடப்பாண்டில் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆட்டோமொபைல் உலகில் ரெட்ரோ பைக்குகள் விற்பனையில் புதிய சகாப்தத்தினை படைத்துள்ளது. ஜாவா, ஜாவா 42 மற்றும் ராயல் என்பீல்டு கிளாசிக் போன்ற ரெட்ரோ பைக்குகள் விற்பனையில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த சூழலில், 2019ம் ஆண்டு விற்பனைக்கு களமிறங்கவுள்ள 5 புதிய மலிவு விலைரெட்ரோ பைக்குகள் & ஸ்கூட்டர்களை இனி பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ஸ்கிராம்ப்ளர்:
ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் கிளாசிக் மாடல்களில் ஸ்கிராம்ப்ளர் வெர்சன் பைக்கினை சோதனை செய்து ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்ப்ளர் என விற்பனைக்கு வரவுள்ளது. இந்த பைக்கிற்கு ஸ்கிராம்ப்ளர் வெர்சன் ஏன தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். இதன் பெயர் மாறலாம் என தெரிகிறது.

என்பீல்டு ஸ்கிராம்ப்ளர் 350சிசி மற்றும் 500சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாகவும் மற்றும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடனும் உள்ளது. ராயல் என்பீல்டு ஸ்கிராம்ப்ளர் 2019ம் ஆண்டு ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

ஜாவா பெராக்:
1970, 80 கால கட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய ஜாவா மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி இடையில் நிறுத்தப்பட்டது. இருந்தாலும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.

ஜாவா மோட்டார் சைக்கிள்களில் அதிக வரவேற்பினை பெற்ற ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளை தொடர்ந்து சக்திவாய்ந்த ஜாவா பெராக் ரெட்ரோ பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. ஜாவா பெராக் 332சிசி எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாகவும் மற்றும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடனும் இருக்கிறது.

ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளுக்கு 1.89 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜாவா பெராக் 2019ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஸ்கோமாடி டிடி125
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்கோமாடி ஸ்கூட்டர் நிறுவனம் கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஸ்கூட்டர் தயாரிப்பில் 60 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பிராஃங்க் சாண்டர்சன் மற்றும் பால் மெலிசி ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்கூட்டர் தயாரிப்பை துவங்கியது.

இந்நிறுவனம் தற்போது ஸ்கோமாடி டிடி125 ரக ஸ்கூட்டரை முதன்முறையாக இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது. ஸ்கோமாடி டிடி125 ஸ்கூட்டரில் 124.6சிசி 2 வால்வு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அப்ரிலியா நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்த எஞ்சினுக்கான ஃப்யூயல் சிஸ்டம் டெல்பி நிறுவனம் வழங்குகிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 14.5 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. ஸ்கோமாடி டிடி125 ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 200மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. ஸ்கோமாடி டிடி125 விலை 1.70 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு 2019ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.

பெனெல்லி இம்பிரியல் 400:
டி.எஸ்.கே பெனெல்லி நிறுவனம் இம்பிரியல் 400 கிளாசிக் பைக்கினை விற்பனைக்கு களமிறக்குகிறது. ராயல் என்பீல்டு பைக்குகளை விட பெனெல்லி இம்பிரியல் பைக்குகள் விலை குறைவாக விற்பனைக்கு வரவுள்ளது.

இதன் 373சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 19.7 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தாக உள்ளது. இம்பிரியல் 400 கிளாசிக் 5 கியர்களுடன் ரெட்ரோ லுக்குடன் 2019ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வருகிறது.

யுஎம் சில்:
அமெரிக்காவை சேர்ந்த யுஎம் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவின் லோஹியா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து பைக்குகளை தயாரித்து வருகிறது. தற்போது யுஎம் மோட்டார் சைக்கிள்ஸின் புதிய யுஎம் சில் என்ற ரெட்ரோ ஸ்கூட்டர் 2019ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வருகிறது. யுஎம் சில் ஸ்கூட்டர் 150சிசி எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாகவும் மற்றும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் இருக்கிறது. பியாஜியோ வெஸ்பா போன்று யுஎம் சில் ஸ்கூட்டரின் விலை குறைவாக இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








