அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள்

ஹீரோ நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக்காக விற்பனைக்கு வந்துள்ளது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ். இதன் அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.

அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள்

இந்தியாவின் நம்பர் ஒன் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டார்கார்ப் கடந்த மே 1ம் தேதி ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் என மூன்று பைக்குகளை அறிமுகம் செய்தது. டிசைனில் முற்றிலும் மாறுபட்டு மூன்று பைக்குகளும் காட்சியளித்தது. இதில் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஸ்போர்ட்ஸ் பைக் டிசைனுடன் ஃபுல்லி ஃபேர்டு மாடலில் வெளிவந்தது. ஹீரோ நிறுவன வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்த்துள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள்

ஃபுல்லி ஃபேர்டு வெர்ஸன்:

ஹீரோ நிறுவனத்தின் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் ஃபுல்லி ஃபேர்டு வெர்ஸனாக வெளிவந்துள்ளது. எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் டிசைனை அடிப்படையாக கொண்டு எக்ஸ்ட்ரீம் 200எஸ் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நேர்த்தியான சிங்கிள் ஹாண்டில் பார் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக்கின் அடிப்படையை கொண்டு பொருத்தப்பட்டுள்ள ஃபூட் பெக்குகள் (Foot Peg) பைக்கிற்கு சிறப்பான தோற்றத்தை தருகிறது. பைக் ரைடர்களுக்கு சவுகரியமான வகையில் இதன் சீட் வடிவைக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள்

ப்ரகாசமான புதிய எல்இடி விளக்குகள்:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் ரவுண்டு வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பிரகாசமான வெளிச்சத்தை தருகிறது. இதன் எல்இடி விளக்குகள் இதனுடன் வெளிவந்த எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி பைக்கினை விட டிசைன் மாறுபட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஹீரோ நிறுவனத்தில் எல்இடி ஹெட்லேம்ப்புடன் வெளிவரும் மூன்றாவது பைக் என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ நிறுவனத்தின் பெரும்பாலான பைக்குகள் ஹலோஜின் விளக்குகளாக வெளிவந்துள்ளது.

அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள்

மேன்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர்:

ஹீரோ நிறுவனத்தின் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிடி வசதி அடங்கிய மேன்படுத்தப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கியர் இண்டிகேட்டர், ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர், ட்ரிப்மீட்டர் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் சிறப்பு அம்சமாக ஜிபிஎஸ் நாவிகேசன் வசதியும் ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது.

அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள்

அதிநவீன ஆற்றல்மிக்க என்ஜின்:

எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் சக்திவாய்ந்த என்ஜின்ஏர் கூல்டு டூயல் வால்வு சிங்கிள் சிலிண்டர் 199.6 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 18 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும் ஆற்றல்மிக்கது . இதில் கார்புரேட்டருடன் கூடிய 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியையும் ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது.

அட்டகாசமான ஸ்போர்ட்ஸ் பைக் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்: அசத்தலான ஐந்து சிறப்பு அம்சங்கள்

குறைந்த விலை:

ஹீரோ நிறுவனத்தின் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையில் 98 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் உள்ள அம்சங்களுக்கு இந்த விலை மிகவும் குறைவு என தெரிகிறது. மேலும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் கருப்பு, சிகப்பு, ப்ரவுன் என மூன்று வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. ப்ளூடூத் கனெக்டிவிடி, ஜிபிஎஸ், 200சசி என்ஜின் இத்தனை சிறப்பு அம்சங்களை கொண்ட பைக் 98,500 ரூபாய்க்கு கிடைப்பது சிறப்பான ஒன்றாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 9, 2019, 13:29 [IST]
English summary
Top 5 Highlighting Features Of New Hero Xtreme 200S: Read More in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+