விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

4 லட்ச ரூபாய் மதிப்பில் புத்தம் புதிய பைக் ஒன்றை, விஜய் சேதுபதி வாங்கியுள்ளார். இதன் பதிவு எண் எதை குறிக்கிறது என சமூக வலை தளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. வழக்கமான ஹீரோயிசத்தை தவிர்த்து விட்டு, படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதால், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் தற்போது விஜய் சேதுபதியின் பெயர் ஒலித்து கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவந்தாலும், அவை தோல்வியடைவது என்பது மிகவும் அபூர்வமான விஷயமாகதான் உள்ளது. அந்த அளவிற்கு மிக குறுகிய காலத்திலேயே தனக்கென பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை விஜய் சேதுபதி உருவாக்கி விட்டார்.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

எவ்விதமான சினிமா பின்னணியும் இல்லாமல், திரையுலகில் காலடி எடுத்து வைத்து, வரிசையாக பல்வேறு சாதனைகளை படைத்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மிக தீவிரமான மோட்டார் சைக்கிள் பிரியர் ஆவார்.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான '96' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியின் திரைப்பயண வரலாற்றில், இப்படம் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இதனால் விஜய் சேதுபதி உச்சி குளிர்ந்து போனார். எனவே '96' திரைப்பட இயக்குனர் பிரேம் குமாருக்கு, மிகவும் சர்ப்ரைஸான முறையில், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மோட்டார் சைக்கிளை, கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் சேதுபதி பரிசளித்தார்.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

'96' திரைப்பட இயக்குனர் பிரேம் குமார், கிளாசிக் பைக்குகள் மீது ஆர்வம் கொண்டவர் என்பதை அறிந்து கொண்டு, அவருக்கு இந்த பரிசை விஜய் சேதுபதி வழங்கினார். '96' திரைப்படத்தின் பெயரை குறிப்பிடும் வகையில், இந்த பைக்கின் பதிவு எண் '0096' என வாங்கப்பட்டது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இந்த சூழலில் விஜய் சேதுபதி தற்போது தனக்காக, பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் (BMW G310GS) என்ற பைக்கை வாங்கியுள்ளார். டீலரிடம் இருந்து சாவியை பெறும்போது, அவரது முகத்தில் தோன்றிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

விஜய் சேதுபதி பைக்கை டெலிவரி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் (bmw motorrad) பகிர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

பிஎம்டபிள்யூ மோட்டோராட் என்பது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரேத்யேகமான மோட்டார் சைக்கிள் பிரிவு ஆகும். இந்நிறுவனத்தின் வாயிலாகதான், பிஎம்டபிள்யூ பைக்குகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

விஜய் சேதுபதி ரசிகர்கள் பலர் தற்பேது இந்த புகைப்படங்களை, பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். இதன் மூலம் இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களும் மிகவும் புகழ்பெற்றதாக திகழ்கின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இவ்விரு பைக்குகளும், கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலரையும் ஈர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, கடந்த சில நாட்களுக்கு முன், பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கை வாங்கியிருந்தார். தற்போது விஜய் சேதுபதியும் அதே பைக்கை வாங்கியுள்ளார். இவர்களுக்கு முன்னதாக யுவராஜ் சிங் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கை வாங்கியிருந்தார்.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங், கடந்த செப்டம்பர் மாதமே, பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கை வாங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி310ஜிஎஸ் மற்றும் ஜி310ஆர் ஆகிய இரு பைக்குகளும், பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான், இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து சர்வதேச மார்க்கெட்களுக்கு, கடந்த 2016ம் ஆண்டு முதலே, இவ்விரு பைக்குகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

ஆனால் பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் மற்றும் ஜி310ஆர் ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களும் இந்தியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. எனவே இவை இரண்டும், இந்திய மார்க்கெட்டில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இந்த சூழலில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம், இவ்விரு மோட்டார் சைக்கிள்களும் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கப்பட்டன. விலை உயர்ந்த பைக்குகள் என்றபோதும், கடந்த ஆண்டில் மொத்தம் 1,640 யூனிட்கள் (ஜி310ஜிஎஸ், ஜி310ஆர் ஆகிய 2 பைக்குகளும் சேர்த்து) விற்பனை செய்யப்பட்டன.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கின் விலை 3.49 லட்ச ரூபாய். அதே சமயம் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் விலை 2.99 லட்ச ரூபாய். இவை இரண்டும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு வருகையில் விலை இன்னும் கணிசமாக அதிகரிக்கும்.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இதில், பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கைதான் தற்போது விஜய் சேதுபதி வாங்கியுள்ளார். இந்த பைக்கில், 313 சிசி, வாட்டர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவர் மற்றும் 28 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ட்யூயல் சேனல்) ஸ்டாண்டர்டாக வழங்கப்படுவது சிறப்பு. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 143 கிலோ மீட்டர்கள் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

முன்னதாக '96' திரைப்பட இயக்குனர் பிரேம் குமாருக்கு '0096' என்ற பதிவு எண்ணுடன் கூடிய பைக்கை விஜய் சேதுபதி பரிசளித்திருந்தார். ஏற்கனவே குறிப்பிட்டபடி, '96' திரைப்படத்தின் பெயரை குறிப்பிடும் வகையில் '0096' என்ற பதிவு எண் வாங்கப்பட்டது.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இந்த சூழலில் விஜய் சேதுபதி தற்போது தனக்காக வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி310ஜிஎஸ் பைக்கிற்கு, 'TN01 BH 1979' என்ற பேன்சி நம்பரை பெற்றுள்ளார். எதற்காக விஜய் சேதுபதி இந்த பதிவு எண்ணை வாங்கினார் என்பது தொடர்பாக சமூக வலை தளங்களில் அவரது ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி வாங்கிய 4 லட்ச ரூபாய் பைக்கின் நம்பர் பிளேட் இதைத்தான் குறிக்கிறது.. ரசிகர்கள் வியப்பு

இந்நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்த வருடத்தை குறிப்பிடும் வகையில்தான் இந்த பதிவு எண் பெறப்பட்டுள்ளதாக IndiaGlitz செய்தி வெளியிட்டுள்ளது. கேள்விக்கு விடை தெரிந்ததால், விஜய் சேதுபதி ரசிகர்கள் தற்போது திருப்தியடைந்துள்ளனர். அத்துடன் ஆடம்பரம் இல்லாவிட்டாலும், விஜய் சேதுபதி ரசனையான மனிதர்தான் என அவர்கள் கூறி வருகின்றனர்.

Most Read Articles

English summary
Actor Vijay Sethupathi Buys BMW G310GS Worth Rs.3.49 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X