அட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்!

ஏப்ரிலியா நிறுவனத்தின் எஸ்ஆர் வரிசை ஸ்கூட்டர்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர்களில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன வ ர இருக்கின்றன.

அட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்!

ஏப்ரிலியா நிறுவனம் எஸ்ஆர் வரிசையில் எஸ்ஆர்125, எஸ்ஆர் 125 ஸ்டார்ம், எஸ்ஆர்150 ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு, இந்த ஸ்கூட்டர்களில் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட இருக்கின்றது.

அட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வரும் எஸ்ஆர் வரிசை ஸ்கூட்டர்களில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் வர இருக்கிறது. இதனால், மாசு உமிழ்வு குறைவதுடன், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாக இருக்கும்.

அட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்!

தவிரவும், எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த புதிய மாடல்களில் கவர்ச்சிகரமான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களுடன் வர இருக்கின்றன

அட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்!

இவை அனைத்திற்கும் மேலாக புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட இருக்கிறது. புளூடூத் இணைப்பு வசதி மூலமாக ஸ்மார்ட்ஃபோனுடன் இணைத்துக் கொண்டு பல்வேறு தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

அட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்!

இதற்காக பிரத்யேக செயலியையும் ஏப்ரிலியா அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பல்வேறு வசதிகளை பெறுவதற்கும் இந்த செயலி வழி வகுக்கும். இந்த புதிய வசதிகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டகாசமான தொழில்நுட்ப வசதியுடன் வரப்போகும் ஏப்ரிலியா ஸ்கூட்டர்கள்!

வரும் ஜனவரி மாதம் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஏப்ரிலியாவின் ஸ்போர்ட்டியான எஸ்ஆர் வரிசை ஸ்கூட்டர்களில் புதிய அம்சங்கள் மதிப்பை கூட்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2019, 11:36 [IST]
English summary
According to BikeWale, the next generation Aprilia SR range of scooters will feature Bluetooth connectivity in addition to BS-VI complaint engines. The Aprilia SR150, SR125, and the SR125 Storm will come loaded with a Bluetooth enabled speedometer console.
மேலும்... #அப்ரிலியா #aprilia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+