இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: முழு தகவல்!

அப்ரில்லா நிறுவனம் புதிய 125சிசி திறன்கொண்ட ஸ்டார்ம்125 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

பியாஜியோ நிறுவனத்தின் சப் பிராண்டாக இருக்கும் அப்ரில்லா, அதன் 125சிசி திறன் கொண்ட புதிய ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூ. 65 ஆயிரம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் ஸ்டார்ம் ஸ்கூட்டரைதான் அந்த நிறுவனம் இந்தியாவில் இன்று (மே 24) அறிமுகம் செய்துள்ளது.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

டிரம் பிரேக் வசதியுடன் வெளி வந்திருக்கும் இந்த ஸ்கூட்டரை, கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அந்த நிறுவனம் முதல்முறையாக அறிமுகம் செய்திருந்தது. ஆனால், அப்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடலைக் காட்டிலும், தற்போது அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்கூட்டர் கணிசமான அப்டேட்களைப் பெற்றுள்ளது.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

அதன்படி, கிராப் ஹேண்டில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், சிவப்பு வண்ணத்திலான அப்ரில்லா லோகோவுக்கு பதிலாக வெண்மை நிறத்திலான லோகோ வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் சில மாற்றங்களும் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

ஸ்கூட்டரின் விலை குறைப்பு நடவடிக்கையாக இந்த மாற்றங்கள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், டயர்கள் மாற்றம் பெறாமல் கண்காட்சியின்போது, எதை பொருத்தியிருந்தார்களே, அதையேத்தான் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரில் பொருத்தியுள்ளனர்.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

அந்தவகையில், முன் பக்கத்தில் 120/80 என்ற அளவிலும், பின் பக்கத்தில் 130/80 என்ற அளவிலுமான, ஆஃப்-ரோடு பயணத்திற்கு ஏதுவான வீ ரப்பர் டயர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதற்கு ஏதுவான 12 இன்ச் அளவிலான வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

இத்துடன், பாதுகாப்பு வசதியாக டிஸ்க் பிரேக்குடன் கூடிய சிபிஎஸ் பிரேக்கிங் வசதி எதிர்பார்க்கப்பட்டநிலையில், ஏமாற்றம் அளிக்கும் விதமாக டிரம் பிரேக்குடன் கூடிய சிபிஎஸ் பிரேக்கிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. அப்ரில்லா ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் லைட் உள்ளிட்டவையும், எஸ்ஆர் 125 மாடலில் பொருத்தப்பட்டிருப்பவையும் ஒன்றாக இருக்கின்றன.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

தொடர்ந்து, எஸ்ஆர் 125 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்ஜின்தான், ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், 124.49 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்தான் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 9.5 எச்பி பவரையும், 9.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜினில் சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதோ அறிமுகமாகிவிட்டது அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டர்: விலை மற்றும் ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!

அப்ரில்லா பிராண்டில் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருந்து வந்தாலும், இந்தியாவில் அப்ரில்லாவின் ஸ்கூட்டர்களுக்கே அதிக மவுசு நிலவி வருகின்றது. இதன்காரணமாகவே, அப்ரில்லா நிறுவனம், அதன் ஸ்கூட்டர்களை அதிகமாக அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில்தான், புதிய ஸ்டார்ம்125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2019, 19:26 [IST]
English summary
Aprilia Storm 125 Launched. Read In Tamil.
மேலும்... #அப்ரில்லா #aprilia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+