ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

பெங்களூரை தொடர்ந்து சென்னையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் காணலாம்.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

சென்னையில் ஏத்தர் 450 ஸ்கூட்டருக்கு ரூ.1,31,683 ஆன்ரோடு விலையும், 340 மாடலுக்கு ரூ.1,19,091 ஆன்ரோடு விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஃபேம்-2 அரசு மானியத் திட்டத்தின் கீழ் கழிவு போக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

தமிழக அரசின் வரி விதிப்பு முறை காரணமாக, பெங்களூரைவிட சென்னையில் ஏத்தர் 340 ஸ்கூட்டர் ரூ.8,000 கூடுதல் விலையிலும், 450 ஸ்கூட்டர் ரூ.9,000 கூடுதல் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளன. எனினும், மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

இதன்படி, ஏத்தர் 340 ஸ்கூட்டருக்கு மாதம் ரூ.2,274 கட்டணத்திலும், 450 ஸ்கூட்டரை ரூ.2,517 கட்டணத்திலும் குத்தகை அடிப்படையில் எடுத்து பயன்படுத்த முடியும். பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ், சாஃப்ட்வேர் அப்டேட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆனால், இதற்கு காப்புத் தொகை செலுத்த வேண்டி இருக்கும். அது முழுவதுமாக திரும்ப பெறக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறைந்தது 12 மாதங்களுக்கு குத்தகை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

ஏத்தர் 340 ஸ்கூட்டரில் இருக்கும் மின் மோட்டார் 14 என்எம் டார்க் திறனை வழங்கும். 0 - 40 கிமீ வேகத்தை 5.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 72 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் பேட்டரி 50,000 கிமீ தூரம் வரை ஆயுட்காலம் கொண்டது. பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 50 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும்.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

ஏத்தர் 450 ஸ்கூட்டரின் பேட்டரி 75 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கிறது. 0 - 40 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

சென்னையில் 10 சார்ஜ் ஏற்றும் நிலையங்களை ஏத்தர் திறந்துள்ளது. இதனை விரிவுப்படுத்தும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. மேலும், சென்னையில் ஏத்தர் ஸ்கூட்டர்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டுவதற்கான திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏத்தர் 340 மற்றும் 450 ஸ்கூட்டர்கள் சென்னையில் விற்பனைக்கு அறிமுகம்!

வரும் 24ந் தேதி முதல் இந்த இரண்டு மின்சார ஸ்கூட்டர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. செப்டம்பர் முதல் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும். சென்னையை தொடர்ந்து புனே, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பையிலும் ஏத்தர் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, July 8, 2019, 19:00 [IST]
English summary
Bangalore based Ather Energy limited has launched its 340 and 450 electric scooters in Chennai.
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+