சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் சென்னை வாசிகளை குஷிபடுத்தும் வகையில், அதன் முதல் ஷோரூமை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம், மின்வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில், அந்நிறுவனம் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய இரு மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றது.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

அதேசமயம், இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும், அந்நிறுவனம், முன்னதாக பெங்களூருவில் மட்டுமே விற்பனைச் செய்து வந்தது.

இந்த நிலையில், அதனை நாடு முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முயற்சியில் ஏத்தர் ஈடுபட்டு வருகின்றது.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

அதனடிப்படையில், முதல்முறையாக பெங்களூருவைத் தாண்டி அந்நிறுவனம் தமிழகத்தில் கால் தடம் பதிக்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.

அதன் முயற்சியாக தலைநகர் சென்னையில், அதன் முதல் ஷோரூம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை அது தொடங்கியுள்ளது.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

அவ்வாறு, நுங்கம்பாக்கத்தில் உள்ள வாலஸ்கார்டன் பகுதியில்தான் அதன் முதல் ஷோரூம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஷோரூம் மூலமாகவே சென்னை வாசிகளுக்கு, அதன் இருமாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அந்நிறுவனம் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதில், ஏத்தர் 350 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1,19,091 என்ற விலையிலும், 450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1,31,683 என்ற விலையிலும் விற்பனைச் செய்யப்பட உள்ளது. இது, ஆன்ரோடு விலையாகும்.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

அதேசமயம், இந்த விலைகள் மத்திய அரசின் ஃபேம்-2 மானியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் விலையாகும். ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், பெங்களூருவில் ரூ. 8 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரை விலைக் குறைவாக விற்கப்படுகின்றது. இதற்கு, கர்நாடகா-தமிழ்நாடு இடையில் உள்ள விரி விதிப்பு வித்தியாசமே காரணமாக இருக்கின்றது.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

விலை அதிகமாக இருந்தாலும், சென்னை வாசிகளைக் கவரும் விதமாக ஏத்தர் நிறுவனம் சில சலுகைகளை வழங்க முடிவெடுத்துள்ளது.

அந்தவகையில், இரு ஹெல்மெட்டுகள் இலவசம் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அத்துடன், ஸ்கூட்டரின் விலையிலேயே இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் அடக்கி விற்பனைச் செய்ய இருக்கின்றது.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

இதைத்தொடர்ந்து, சென்னை நகரின் முக்கிய பகுதிகளான ஷாப்பிங் காம்பளக்ஸ், சில குறிப்பிட்ட அலுவலகம், கஃபே பகுதி மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட சில இடங்களில் ஏத்தர் கிரிட் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களை வருகின்ற டிசம்பர் மாதம் வரை அனைவரும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

இத்துடன், சென்னை வாசிகள் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தும் திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சென்னையை அடுத்து நாட்டின் பிற பகுதிகளான புனே, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

இதைத்தொடர்ந்து, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. அதனடிப்படையில், லத்தின் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

சென்னை வாசிகள் உற்சாகமடைய காரணம் இதுதான்... மகழ்ச்சியில் இளைஞர்கள்!

இவ்விரிவாக்கத்தைத் தொடர்ந்து, ஏத்தர் நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை பலமடங்கு உயர்த்த திட்டம் வகுத்து வருகின்றது. அந்தவகையில், ஆண்டொன்றிற்கு 1 மில்லியன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயார் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 24, 2019, 20:27 [IST]
English summary
Ather Energy Opens Experience Centre & Showroom In Chennai. Read In Tamil.
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+