ஓசூரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்புக்காக ஓசூரில் புதிய தொழிற்சாலையை ஏத்தர் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

பெங்களூரை சேர்ந்த ஏத்தர் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ.330 கோடியை ஏத்தர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதுதவிர்த்து, பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் ஏத்தர் நிறுவனத்தில் அதிக அளவு முதலீடு செய்துள்ளன.

ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

தற்போது பெங்களூர் மற்றும் சென்னையில் தனது ஸ்கூட்டர் ஏத்தர் 450 ஸ்கூட்டரை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், முதலீடு பலமாக கிடைத்துள்ள நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில் வர்த்தக விரிவாக்கப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது ஏத்தர் நிறுவனம். நாடு முழுவதும் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

ஹைதராபாத், புனே, டெல்லி, மும்பை உள்பட நாட்டின் 30 நகரங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சார்ஜ் ஏற்றுவதற்கான நிலையங்களையும் உருவாக்கும் முனைப்பில் இருக்கிறது.

ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

நாட்டின் பிற பெருநகங்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு, ஏதுவாக உற்பத்தி திறனை அதிகரிக்கும் பொருட்டு, ஓசூரில் புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ஏத்தர்.

ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

ஓசூரில் அமைக்கப்பட இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உள்ள ஆலையை விட ஓசூரில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலை 10 மடங்கு பெரிதாக அமைக்கப்பட இருப்பதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. ரூ.600 கோடி வரை முதலீடு செய்யப்பட இருக்கிறது.

ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

இந்த ஆலையில், ஏத்தர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமின்றி, இந்த ஆலையில் லித்தியம் அயான் பேட்டரியையும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன்மூலமாக, ஏத்தர் ஸ்கூட்டர்களுக்கான பேட்டரி சப்ளை தங்கு தடையில்லாமல் பெற இயலும்.

ஓசூரில் பிரம்மாண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்கிறது ஏத்தர்!

அடுத்த 5 ஆண்டுகளில் 4,000 பேரை எலெக்ட்ரிக் வாகனத் தயாரிப்புத் துறைக்காக பயிற்சி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஏத்தர் தெரிவித்துள்ளது. இதனால், எலெக்ட்ரிக் வாகனத் துறையின் உற்பத்தி மற்றும் சேவை துறையில் திறன்மிக்க பணியாளர்களை கிடைக்க வழி வகுக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2019, 11:57 [IST]
English summary
Ather Energy has signed a memorandum of understanding (MoU) with the government of Tamil Nadu to set up an electric scooter manufacturing unit in Hosur.
மேலும்... #ஏத்தர் #ather energy
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+