ப்யூர் சிங்கிள் பசங்களுக்கான யமஹாவின் புதிய மாடல்... அட்டகாசமான புகைப்படம் உள்ளே...
ப்யூர் சிங்கிளா வாழ்ந்து வரும் இளைஞரா நீங்கள், அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். உங்களுக்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ள யமஹாவின் அதிநவீன புது மாடல் பைக். புகைப்படங்கள் உள்ளே.

இந்தியாவில் வாகனங்களுக்கான ரசிகர்கள் மிக அதிகம். அதுவும் இருசக்கர வாகனங்களுக்கு சொல்ல வேண்டாம். நம்ம ஊர் சாலையை கொஞ்சம் பார்த்தாலே தெரிஞ்சிடும். அவ்ளோ விதவிதமான பைக்குள் ஏராளமாக குவிந்து உள்ளன.

மேலும், ஒரு காலத்தில் ரிலீஸான பைக்குகள் எல்லாம் காலத்தை கடந்தும் மக்கள் மனதில் இன்றளவும் நின்று வருகின்றன. அந்த வகையில் புல்லட் என்ற பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்பீல்டு நிறுவனம் இன்று வரை பைக் விற்பனையில் ஒரு கிங்காக இருந்து வருகிறது.

பொதுவாக இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் பைக் மீது தான் மக்கள் அதிகம் விருப்பம் கொள்ளுவார்கள். அதை தான் சிறந்த பைக் என்றும் கூறிவந்தனர். ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், பெர்ஃபார்மென்ஸ் பைக்கையும் மக்கள் விரும்புவார்கள் என யமஹாவின் ஆர்டி350 மாடல் பைக் நிரூபித்தது.

இந்த ஆர்டி350 பைக்கை எஸ்காட்ஸ் குரூப் என்ற இந்திய நிறுவனம், யமஹா மற்றும் ராஜ்டூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வெளியிட்டன. இந்த யமஹா ஆர்டி350யை மக்கள் ராஜ்டூட்350 என்றும் அழைத்தனர். இது தான் இந்தியாவின் முதல் பெர்ஃபார்மன்ஸ் பைக் என்று கூறப்படுகிறது. இந்த பைக் 1983 முதல் 1989 வரை விற்பனையில் இருந்து வந்தது.

இந்தியாவில் விற்பனையான முதல் பெர்ஃபார்மன்ஸ் பைக் என்பதால் அப்போதைய இளசுகளை இந்த பைக் பெருமளவில் கவர்ந்து இழுத்தது. பைக் உலகில் மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த மாடல் தற்போதும் சில கடைகளில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்குக்கு மாற்றாக இன்றளவும் புது பைக் விற்பனைக்கு வரவில்லை என்றே கூறலாம்.

இதைத்தொடர்ந்து, யமஹா நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்குமே இந்திய இளைஞர்கள் வெறித்தனமான ரசிகர்களாக மாறிவிட்டனர். ஏனென்றால் இந்நிறுவனம், இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், அவ்வப்போது வடிவமைப்பிலும், தொழில்நுட்ப அம்சங்களையும் மேம்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இளைஞர்களின் தேவையை அறிந்த 'ஆட்டோலோக்யூ டிசைன்ஸ்' நிறுவனம், யமஹாவின் ஆர்டி350 மாடலையும், ஆர்3 மாடலையும் இணைத்து புதிதாக ஓர் கற்பனை மாடலின் டிசைன் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த புதிய நவீன மாடலானது கவர்ச்சிகரமான தோற்றத்தில் வித்தியசமாக அமைந்துள்ளது.

மேலும், இதன் அட்டகாசமான புகைப்படமானது யமஹாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. யமஹா நிறுவனம் இந்த மாடலை தயாரிக்குமேயானால், நிச்சயம் இந்திய பைக் சந்தையில் கட்டும் நிலவும் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிகிறது. ஏன்னா டிசைன் அப்படி.


Click it and Unblock the Notifications








