2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டுகளை காட்சிப்படுத்திய அவான்!

புனே நகரில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில், இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடல்களை அவான் மோட்டார் நிறுவனம் காட்சிப்படுத்தியது.

இரண்டு ஸ்கூட்டர்களுமே வெவ்வேறு டிசைன் அம்சங்கள் மற்றும் செயல்திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டில் 72V 22Ah லித்தியம் அயான் பேட்டரியும், 1,200 வாட் மின் மோட்டாரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அவான் நிறுவனத்தின் 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டுகள்!

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்தத ஸ்கூட்டர் மணிக்கு 60 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக அவான் மோட்டார் தெரிவித்துள்ளது.

அடுத்த மாடல் விலை குறைவான மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்த ஸ்கூட்டரில் 60V 35Ah லித்தியம் அயான் பேட்டரியும், 800 வாட் மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் பயணிக்கும். மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

இந்த இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாதிரி மாடல்களை காட்சிப்படுத்தியது குறித்து அவான் மோட்டார் நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் பங்கஜ் திவாரி கூறுகையில்,"வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த கான்செப்ட்டுகளை உருவாக்கி இருக்கிறோம்.

அவான் நிறுவனத்தின் 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டுகள்!

பார்வையாளர்களிடம் இருந்து சாதகமான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்கள் மற்றும் எங்களது வாடிக்கையாளர்கள் தரும் பின்னூட்டங்களின் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

கடந்த 2015ம் ஆண்டு துவங்கப்பட்ட அவான் மோட்டார் நிறுவனம் ஸீரோ, ஸீரோ ப்ளஸ் மற்றும் ட்ரெண்ட் இ ஆகிய மூன்று ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த ஸ்கூட்டர்களில் லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அவான் நிறுவனத்தின் 2 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டுகள்!

இந்த மூன்று ஸ்கூட்டர்களிலும் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன.

இந்த மூன்று ஸ்கூட்டர்களுமே மத்திய அரசின் ஃபேம்-2 மானியத் திட்டத்தின் கீழ் சேமிப்புச் சலுகைகளை பெறுவதற்கான தகுதிகளை பெற்றுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கு குறைந்தது 80 கிமீ தூரம் பயணிக்கும் திறனையும், 40 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் திறனை பெற்றிருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2019, 10:31 [IST]
English summary
Avan Motors has unveiled two 'concept' electric scooters at the Pune Motor Show held on September 23, 2019. Out of the two scooters showcased, the top-of-the-line model has a claimed range of 200kms on a single charge.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+