மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

உள்நாட்டு சந்தையை மையமாகக் கொண்டு இயங்கும் அவெரா மின் வாகன உற்பத்தி நிறுவனம், அதன் புதிய ரெட்ரோஸா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங்கை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டர் மத்திய அரசின் ஃபேம்2 மானிய திட்டத்திற்கு ஏற்ப தயாராகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவிற்கு, தீர்வு காணும் வகையில் மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்திய அரசு செயல்பட்டு வருகின்றது. இதற்காக மானியம், சிறப்பு சலுகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இதனால், அண்மைக் காலங்களாக பன்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் மின் வாகனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டு வருகின்றன. இதற்கு, நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதைப் போன்று, உள்நாட்டு சந்தையை மையமாக்க கொண்டு இயங்கும், மின் வாகன உற்பத்தி நிறுவனங்களும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளை விற்பனைக்காக இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றன.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இந்நிலையில், இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் அவெரா மின் வாகன தயாரிப்பு நிறுவனமும், அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. ரெட்ரோஸா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இ-ஸ்கூட்டருக்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இது இந்திய மதிப்பில் ரூ. 1.08 லட்சம் என்ற ஆந்திரா எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதனை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், ரூ. 11,200 என்ற தொகையைச் செலுத்தி புக் செய்து கொள்ளலாம். ஆனால், இது தற்போது ஆந்திராவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே, ஆன்லைனில் புக்கிங் வழங்கப்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள லித்தியம்-அயன் பேட்டரி, ஒரே சார்ஜில் 120 முதல் 140 கிமீ தூரம் வரை செல்லும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. அதேசமயம், இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3-4 மணி நேரமே போதுமானதாக இருக்கின்றது. இதுவே, அவெராவின் சார்ஜிங் பாயிண்டில் வைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்தால், 1ல் இருந்து 2 மணி நேரங்களுக்கு உள்ளாகவே முழுமையான சார்ஜை அடைந்து விடுகின்றது.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இந்த ரெட்ரோஸா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3,000w திறன் கொண்ட பிஎல்டிசி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 90 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. குறிப்பாக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அனைத்து பாகங்களும் உள் நாட்டு சந்தையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கின்றது. ஆகையால், மத்திய அரசின் ஃபேம்-2 திட்டத்தின்கீழ் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு 25,000 ரூபாய் வரை மானியம் பெற முடியும்.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இத்துடன், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நவீன தொழில்நுட்ப வசதிகளாக, டிஜிட்டலைஸ்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பேட்டரி மானிட்டரிங் சிஸ்டம், எல்இடி மின் விளக்குகள், சைட் ஸ்டாண்ட் சென்சார், கூடுதலான ஸ்டோரஜ் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரெட்ரோஸா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்க் அசிஸ்ட் மற்றும் இரண்டு ரைடிங் மோட்கள் (எகனாமி மற்றும் ஸ்போர்ட்) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இதுமட்டுமின்றி, ரெட்ரோஸ எலக்ட்ரிக் பைக்கை, பார்ப்பதற்கு ரம்மியமான காட்சிப்படுத்தும் ஏற்படுத்தும் வகையில் அதன் பாடி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அது ரெட்ரோஸாவிற்கு பாரம்பரிய லுக்கையும், துடிப்பான தோற்றத்தையும் வழங்குகின்றது. அவ்வாறு, இதன் பாடி அமைப்பு, அலுமியனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

மேலும், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் சாக் செட் அப்-பும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பாதுகாப்பு வசதிகளாக இரு பக்க வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மானிய திட்டத்துடன் புக்கிங்கிற்கு வந்த அவெரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...!

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அவெரா நிறுவனம், 5 வருட வாரண்டியை வழங்க இருக்கின்றது. அதன் பேட்டரிக்கும் இன்சூரன்ஸ் ஃப்ரீ திட்டத்துடன் கூடிய ஐந்து வருட வாரண்டியை வழங்க இருக்கின்றது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நாடு முழுவதும் விற்பனைக்குக் கொண்டு செல்லும் வகையில், 100க்கும் அதிகமான இடங்களில் அதன் தயாரிப்புகளுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க அவெரா திட்டமிட்டுள்ளது. மேலும், அதற்கான பணியில் அந்த நிறுவனம் தற்போது தீவிரமாக ஈடுபட்டும் வருகின்றது.

Most Read Articles
English summary
Avera Retrosa Electric Scooter Booking Opens For AP Customers. Read In Tamil.
Story first published: Sunday, June 9, 2019, 9:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X