அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

பஜாஜ் நிறுவனம், அதன் பல்சர் 220 எஃப் மாடலில் புதிய வண்ணத் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒன்று பல்சர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால், அந்த அளவிற்கு பிரபலமான பைக்காக பல்சர் இருக்கின்றது.

இதன்காரணமாகவே, பஜாஜ் நிறுவனம் பல்சர் வரிசையில் விற்பனையாகும் பைக்குகள் மீது சற்று கூடுதல் அக்கறையை வைத்திருக்கின்றது. மேலும், அதன் ரசிகர்களை, தன் வசம் வைத்துக்கொள்ளும் அவ்வப்போது அதற்கு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

அந்தவகையில், பல்சரின் 220எஃப் மாடலில் புதிய நிறம் ஒன்றை பஜாஜ் நிறுவனம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

அவ்வாறு, பஜாஜ் பல்சர் 220எஃப் மாடலில் வோல்கனோ சிவப்பு நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பைக் கருப்பு நிறம் சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த நீலம் ஆகிய வண்ணத்தேர்வில் கிடைத்து வந்தது. இத்துடன், வோல்கனோ சிவப்பு கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

பஜாஜ் நிறுவனம் சமீபத்தில்தான் பல்சர் 220எஃப் மாடலின் விலையை உயர்த்தி அறிவித்திருந்தது. அந்தவகையில், ரூ. 1.07 லட்சம் என்ற விலையில் இந்த பைக் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

வோல்கானிக் நிறத்தில் காட்சியளிக்கும் இந்த பைக்கிற்கு மேட் ஃபினிஸிங்கிலான முகப்பு பகுதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ப்யூவல் டேங்கில் காஸ்மெடிக் மாற்றமாக, 3டி தரத்திலான லோகோ பொருத்தப்பட்டுள்ளது. நடுத்தர அழகான மாடலாக இருக்கும் இந்த பைக்கின் ஏரோடைணமிக்கும் சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

இத்துடன், பைக்கின் சிறப்பான ஸ்போர்ட் லுக்கிற்காக ஸ்பிளிட் தன்மை கொண்ட இருக்கை, ஸ்பிளிட் கிராஃப் ரெயில் பார்கள், லேசர் எட்ஜ் கிராஃபிக்குகள் மற்றும் டீப் பிளாக் கார்பன் சைலென்சர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், தனித்துவமான கிராஃபிக்குகள் கொண்ட அண்டர்பெல்லி பேன் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கிற்கு பிரிமியம் லுக்கிற்கு எடுத்துகாட்ட உதவும்.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

இதைத்தவிர இந்த புதிய நிறத்திலான பஜாஜ் 220எஃப் மாடலில் வேறெந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேசமயம், அப்டேட்டுடன் களமிறங்கிய 2019 மாடலில் புதிய மாற்றங்களாக எக்சாஸ்ட் மற்றும் நீல நிற பின்னொளியைக் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

இந்த மோட்டார்சைக்கிளில் பஜாஜ் நிறுவனம் 220 சிசி திறனிலான டிடிஎஸ்-ஐ, 4-ஸ்டிரோக் ஆயில் கூல்ட் எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. 5-ஸ்பீடுகள் கொண்ட கியர்பாக்ஸில் இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக, 20.93 எச்பி பவரையும், 18.55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

இத்துடன், சிறப்பான சிறப்பான ரைடிங் அனுபவத்திற்காக, பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 5 வழிகளில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளுகின்ற வகையிலான நைட்ரோக்ஸ் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

அடடா... பலே வண்ணத்தில் களமிறங்கிய பல்சர் 220எஃப்... புகைப்படங்கள் உள்ளே!!!

மேலும், பாதுகாப்பான பயணத்திற்காக பைக்கின் முன் பக்க வீலிற்கு 260 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 230 மிமீ டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Bajaj Adds New Colour Option In Pulsar 220F. Read In Tamil.
Story first published: Friday, August 2, 2019, 19:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X