டோமினார் 400 பைக்கின் விலையை பஜாஜ் அதிரடியாக குறைக்க காரணம் இதுதான்... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
டோமினார் 400 பைக்கின் விலையை பஜாஜ் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனத்தின் முதன்மையான மாடல்களில் ஒன்று டோமினார் 400 (Bajaj Dominar 400). இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதல் பஜாஜ் டோமினார் 400 சிறப்பான முறையில் விற்பனையாகி வருகிறது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடல்களில் ஒன்றாக பஜாஜ் டோமினார் 400 திகழ்கிறது.

விற்பனை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, அப்டேட் செய்யப்பட்ட 2019 மாடல் டோமினார் 400 பைக்கை பஜாஜ் நிறுவனம் சமீபத்தில் களத்தில் இறக்கியது. புதுப்பிக்கப்பட்ட மாடலின் விலை 1,73,870 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் புதிய டோமினார் 400 பைக்கின் விலையை பஜாஜ் நிறுவனம் தற்போது 3,723 ரூபாய் குறைத்துள்ளது.

விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு பஜாஜ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இனி பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை 1,70,147 ரூபாய் மட்டுமே. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். டோமினார் 400 பைக்கின் உற்பத்தி செலவு பஜாஜ் நிறுவனம் குறைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதன் காரணமாகவே விலை குறைப்பு செய்யப்பட்டிருக்கலாம். இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பஜாஜ் டோமினார் 400 பைக்கில், 373.4 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,650 ஆர்பிஎம்மில் 39.4 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 35 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

அத்துடன் ஏபிஎஸ் பிரேக் வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. மிகவும் சௌகரியமாக நீண்ட தொலைவு பயணிக்கும் வகையில் பஜாஜ் டோமினார் 400 வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரைடருக்கு பல்வேறு தகவல்களை வழங்கும் ட்யூயல் ஸ்க்ரீன் செட் அப்பையும் பஜாஜ் டோமினார் 400 பெற்றுள்ளது.

மேட் பிளாக், சில்வர், க்ளோஸி ரெட் மற்றும் புத்தம் புதிய ஆரோரல் க்ரீன் என மொத்தம் 4 வண்ணங்களில், பஜாஜ் டோமினார் 400 மோட்டார்சைக்கிள் கிடைக்கிறது. புதிய பஜாஜ் டோமினார் 400 மோட்டார்சைக்கிள் சிட்டி மற்றும் லாங் டிஸ்டன்ஸ் என 2 விதமான ரைடிங்கிற்கும் ஏற்ற வகையில், அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய டோமினார் 400 மாடலுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், புதிய டோமினார் 400 பைக்கின் விலையை பஜாஜ் நிறுவனம் கணிசமாக குறைத்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








