பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் அதிக சக்தி வாய்ந்த மோட்டார்சைக்கிள்கள், பஜாஜ் நிறுவனத்தின்கீழ் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் மிக விரைவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

நாட்டின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, ஆஸ்திரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கேடிஎம் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை, அந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

மேலும், கேடிஎம் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் தயாரிப்புகளையும், பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

இதனை உறுதிச் செய்யும் விதமாக, ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ட்வின் பைக்குகளை நடப்பாண்டின் களமிறக்க இருப்பதாக பஜாஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டது. மேலும், அந்த பைக்குகளை வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக நல்ல நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை ஆங்கில இணையதளமான மணி கன்ட்ரோல் செய்தியாக வெளியிட்டுள்ளது.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

ஆஸ்திரியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றவும் பஜாஜ்-கேடிஎம் கூட்டணி முடிவு செய்துள்ளது. ஆகையால், இந்த பைக்குகள் நியாயமான விலையில் விற்பனைக்கு களமிறங்க வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. தொடர்ந்து, இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஹஸ்க்வர்னா பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

இந்த நிலையில், ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் ட்வின் மோட்டார்சைக்கிள்களை, அந்த நிறுவனம் அவ்வப்போது சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதுகுறித்த ஸ்பை புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி, அதன் ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியது.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

இந்நிலையில்தான், பஜாஜ் நிறுவனம் இந்த இரு பைக்குகளையும் நடப்பாண்டின் நவம்பர் மாதத்திற்குள் விற்பனைக்கு களமிறக்கப்பட இருப்பதாக வெளியிட்டுள்ளது. அந்தவகையில், இந்த பைக்குகள் தீபாவளி அல்லது வரும் ஏதேனும் ஓர் திருவிழா நாட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

பஜாஜ் நிறுவனம், முதலில் ஹஸ்க்வர்னாவின் விட்பிலின் 401 மற்றும் ஸ்வர்ட்பிலின் 401 ஆகிய பைக்குகளைத்தான் இங்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவைதான் மறைக்கப்பட்ட தோற்றத்தில் சாலையில் காட்சிக் கொடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து, ஹஸ்க்வர்னாவின் விட்பிலின் 701 மாடல் மோட்டார்சைக்கிளும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

இந்த பிரீமியம் ரக பைக்குகள் தனித்துவமான டிசைன் மற்றும் எஞ்ஜின் செயல்திறன்களைப் பெற்றுள்ளன. ஹஸ்க்வர்னா பைக்குகளை அடுத்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டநிலையில், நடப்பாண்டிலேயே பஜாஜ் நிறுவனம், அறிமுகம் செய்ய இருப்பது அதன் ரசிகர்களிடையே கிளுகிளுப்பைத் தூண்டியுள்ளது.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

ஹஸ்க்வர்னா 401 மற்றும் ஸ்வர்ட்பிலிலன் 410 ஆகிய இரண்டு பைக் மாடல்களுமே கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இதன் எஞ்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் இதர முக்கிய பாகங்கள், கேடிஎம் நிறுவனத்தின் பைக்குகளின் பைக்குகிளில் இருந்து பெறப்பட்டுள்ளது. டிசைனில் மட்டுமே இவை வேறுபட்டு காணப்படுகின்றன.

பஜாஜின்கீழ் களமிறங்கும் அதிக சக்தி வாய்ந்த பைக்: நவம்பரில் அறிமுகமாவது உறுதி...?

ஹஸ்க்வர்னா பைக்குகளில் 373சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது. மேலும், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இந்த பைக்குகள், கேடிஎம் 390 பைக்குகளைக் காட்டிலும் சற்று கூடுதலான பிரீமியம் விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் கூறப்படுகிறது. அந்தவகையில், அவை ரூ. 2.3 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 19, 2019, 13:53 [IST]
English summary
Bajaj Auto Confirms November Launch For Husqvarna Twins — And So Our Watch Begins. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+