டெலிவரிக்கு தயாராகும் பஜாஜின் மலிவு விலை க்ரூஸர் பைக்!
பஜாஜ் நிறுவனம் மலிவு விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வரும் க்ரூஸர் ரகத்திலான அவென்ஜர் வரிசையில் 160 ஏபிஎஸ் மாடலை புதிதாக அறிமுகம் செய்தது. தற்போது, இந்த மோட்டார்சைக்கிளினை விற்பனைக்கு அதன் டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

பஜாஜ் நிறுவனம், அதன் க்ரூஸர் ரகத்திலான அவென்ஜர் 160 ஏபிஎஸ் வெர்ஷனை விற்பனைக்காக அதன் டீலர்களுக்கு அனுப்பி வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அவென்ஜர் 160 ஏபிஎஸ் மடாலானது 180 மாடலை ரீபிளேஸ் செய்யும் விதமாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 81,037 ஆக உள்ளது. இது, அவென்ஜர் 180 மாடலைக் காட்டிலும் ரூ.7 ஆயிரம் குறைவாகும்.

பஜாஜின் இந்த புத்தம் புதிய அவென்ஜர் 160 பைக்கில் 160.3 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜின்தான் பல்சர் என்எஸ் 160 பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது 15.5 பிஎஸ் பவரையும், 14.6 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு டிரான்மிஸ்ஸன் கியர்பாக்ஸ் இயங்குகிறது.

அதேசமயம், அவென்ஜர் 160 பைக் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரவிருக்கும் மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப, பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜினைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 180 மாடல் அவென்ஜரை ரீபிளேஸ் செய்யும் விதமாக வந்துள்ள இந்த மோட்டார்சைக்கிள் அதன் டிசைன் தாத்பரியங்களை சற்று கடனாகப் பெற்றுள்ளது. மேலும், சில கணிசமான மாற்றங்களையும் பெற்று இந்த மோட்டார்சைக்கிள் தயாராகி இருக்கின்றது.

அந்தவகையில், இந்த மோட்டார்சைக்கிள் ஸ்ட்ரீட் அவதார் ஸ்டைலில் மட்டுமே கிடைக்கின்றது. மேலும், இது ஸ்போர்ட் டார்க் தீம் ரன்னிங் கியருடன், ஃபிளாட் ஹேண்டில்பார் மற்றும் சிட்டி ஃபிரண்ட்லி ரைடிங் பொசிஷன் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிள் கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கி இருக்கின்றது.

புதிய பாதுகாப்பு வசதியான ஏபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில், டியூப் லெஸ் டயர்களுடன் அலாய் வீல்கள் முன் மற்றும் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் அனலாக் க்ளஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் பொருத்தப்படாதது சற்று ஏமாற்றமாக இருக்கின்றது.

தற்போது, இந்த புதிய அவென்ஜர் மாடலைத்தான் பஜாஜ் நிறுவனம், விற்பனைக்காக அதன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றது. அதேசமயம், சில அவென்ஜர் மாடல்களை டீலர்கள் டெலிவரி செய்திருப்பதாக ஆட்டோ கார் இந்தியா ஆங்கில இணையதளம் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் விற்பனையானது இந்த வருடம் இறுதியில் ஆரம்பிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், மிக விரைவாக ஆரம்பிக்கும் விதமான செயலில் அந்த நிறுவனம் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








