இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இந்தியாவின் மிக மலிவான க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிளை, வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவது உறுதி.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில், க்ரூஸர் (Cruiser) ரக மோட்டார் சைக்கிள்கள் மீதான ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் வழக்கமான மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில், க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள்கள் சற்று விலை உயர்ந்தவையாக உள்ளன.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

எனவே பட்ஜெட் விலையில் பைக் வாங்க வேண்டும் என நினைப்பவர்களால், க்ரூஸர் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது. ஆனால் சாமானிய இந்தியர்களும் க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்ய வேண்டும் என பஜாஜ் நிறுவனம் விரும்புகிறது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இதற்காக மிகவும் மலிவான விலையில், க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை களமிறக்க பஜாஜ் முடிவு செய்துள்ளது. வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த பைக்தான், இந்தியாவின் மிக மலிவான க்ரூஸர் ரக பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள்களில் பஜாஜ் அவென்ஜரும் (Bajaj Avenger) ஒன்று. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பஜாஜ் அவென்ஜர் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. பஜாஜ் அவென்ஜர் வழங்கும் சௌகரியமே இதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இந்திய மார்க்கெட்டில் பஜாஜ் அவென்ஜர் மோட்டார் சைக்கிள் மிக நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 150 சிசி, 180 சிசி மற்றும் 220 சிசி இன்ஜின் ஆப்ஷன்களில் பஜாஜ் அவென்ஜர் கிடைத்து வந்தது. ஆனால் 150 சிசி வெர்ஷன் கடந்தாண்டு கைவிடப்பட்டது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

தற்போது 180 சிசி மற்றும் 220 சிசி வெர்ஷன்களில் மட்டுமே பஜாஜ் அவென்ஜர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அவென்ஜர் 180 சிசி மாடலையும் கைவிட்டு விட பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

ஆனால் அதற்கு பதிலாக, அவென்ஜர் 160 சிசி மாடலை களமிறக்க பஜாஜ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஜிக் வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 160 சிசி அவதாரத்தில் விற்பனைக்கு வரவுள்ள அவென்ஜர் க்ரூஸர் மோட்டார் சைக்கிள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

பஜாஜ் பல்சர் என்எஸ்160 (Bajaj Pulsar NS160) பைக்கில் இடம்பெற்றுள்ள 160.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு இன்ஜின்தான், அவென்ஜர் 160 சிசி பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 15.28 பிஎச்பி பவர், 14.6 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இதன்மூலம் அதன் செக்மெண்ட்டில் மிகவும் சக்தி வாய்ந்த பைக்குகளில் ஒன்றாக பஜாஜ் பல்சர் என்எஸ்160 திகழ்கிறது. அதனுடைய இன்ஜின் வழங்கப்படுவதன் காரணமாக, அவென்ஜர் 160 சிசி மாடலும் நிச்சயம் சக்தி வாய்ந்ததாகவே இருக்கும்.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், 180 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ள அவென்ஜர் 180 மாடலும் கிட்டத்தட்ட இதே அளவிற்கான சக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது. அவென்ஜர் 180 மாடலில், 180 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 15.38 பிஎச்பி பவர் மற்றும் 13.7 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கும். எனவே அவென்ஜர் 160 சிசி மாடலில், இன்ஜின் கெபாசிட்டி குறைந்தாலும் கூட, பெர்ஃபார்மென்ஸ் அதே அளவில்தான் இருக்கும்.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

அத்துடன் பஜாஜ் அவென்ஜர் 160 சிசி மாடலின் இன்ஜின், அடுத்த ஆண்டு அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும். அதாவது இந்த இன்ஜின் குறைவான மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், எரிபொருள் சிக்கனத்திற்கு உகந்ததாகவும் அமையப்பெறும்.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

பஜாஜ் அவென்ஜர் 160 சிசி பைக்கில், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS- Anti-lock Braking System) ஸ்டாண்டர்டாக வழங்கப்படவுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளே இதற்கு காரணம்.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இந்தியாவில் விற்பனையாகும் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும், பாதுகாப்பிற்காக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதி அமலுக்கு வருகிறது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

எனவே பஜாஜ் அவென்ஜர் 160 சிசி பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். குறைந்தபட்சம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமாவது வழங்கப்படுவது உறுதி. டிசைன் ரீதியில் பார்த்தால், புதிய கிராபிக்ஸ் மற்றும் வண்ணங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பஜாஜ் அவென்ஜர் 160 சிசி மோட்டார் சைக்கிள், வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், லான்ச் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

தற்போதைய அவென்ஜர் 180 சிசி மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை 87,827 ரூபாய் ஆகும். ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள அவென்ஜர் 160 மாடலின் விலை இதை விட குறைவாகவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

இதன்மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிக மலிவான க்ரூஸர் ரக மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை இது பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விற்பனைக்கு அறிமுகம் ஆனவுடன் சுஸுகி இன்ட்ரூடர் 150 (Suzuki Intruder 150) உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டியிடும்.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

சுஸுகி இன்ட்ரூடர் 150 பைக் ரூ.1.01 லட்சம் முதல் ரூ.1.11 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பஜாஜ் அவென்ஜர் 160 பைக்கின், கியர் பாக்ஸ், பிரேக், சஸ்பென்ஸன் குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியாவின் மிக மலிவான விலை க்ரூஸர் பைக் இதுதான்.. மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது பஜாஜ்

தற்போதைய தலைமுறை பல்சர் என்எஸ்160 பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான், அவென்ஜர் 160 சிசி மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இதில், நடப்பு தலைமுறை பஜாஜ் அவென்ஜரின் பிரேக் மற்றும் சஸ்பென்ஸன் இடம்பெறலாம்.

Note: Images Used Are Only For Representational Purpose Only

Most Read Articles
English summary
Bajaj Avenger 160 To Be Launched In India As Replacement For Avenger 180. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X