பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

பஜாஜ் நிறுவனத்தின் 160சிசி திறன் கொண்ட அவென்ஜர் க்ரூஸர் ரக பைக் மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

பட்ஜெட் விலையில் சிறந்த க்ரூஸர் பைக் மாடலாக பஜாஜ் அவென்ஜர் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. பஜாஜ் அவென்ஜர் பைக் தற்போது 180சிசி மற்றும் 220சிசி ஆகிய இரண்டு திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

இந்த இரு மாடல்களுமே க்ரூஸர் ரக பைக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களின் தேர்வில் முதன்மை வகிக்கின்றன. இந்த நிலையில், அவென்ஜர் பைக்கில் விலை குறைவான புதிய மாடலை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

தற்போது விற்பனையில் இருக்கும் 180சிசி அவென்ஜர் பைக்கிற்கு மாற்றாக புதிய 160சிசி மாடலை களமிறக்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் பஜாஜ் அவென்ஜர் 180சிசி மற்றும் 220சிசி பைக் மாடல்களில் இரண்டு வால்வுகள் கொண்ட கார்புரேட்டர் எரிபொருள் செலுத்தும் அமைப்புடைய எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகின்றன.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஒத்துப்போவதற்கு ஏதுவாக, 4 வால்வுகள் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சினை பயன்படுத்துவதற்கு பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. எனவே, 160சிசி திறனில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினை பொருத்துவதற்கு பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

பஜாஜ் பல்சர் என்எஸ் 160 பைக்கின் எஞ்சினை இந்த அவென்ஜர் பைக்கிலும் பயன்படுத்திக் கொள்வதற்கும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந்த இரட்டை ஸ்பார்க் பிளக்குகள் கொண்ட எஞ்சின் அதிகபட்சமாக 15.28 பிஎச்பி பவரையும், 14.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

பஜாஜ் அவென்ஜர் பைக்கில் தற்போது பயன்படுத்தப்படும் 180சிசி எஞ்சின் 15.38 பிஎச்பி பவரையும், 13.7 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த எஞ்சினைவிட சிறந்த தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் இணையான பவரை வெளிப்படுத்தும் அம்சத்துடன் புதிய 160சிசி எஞ்சின் இருக்கும்.

பஜாஜ் அவென்ஜர் பைக்கின் 160சிசி மாடல் அறிமுகமாகிறது!

இந்த எஞ்சின் குறைவான மாசு உமிழ்வு மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதாகவும் இருக்கும். மறுபுறத்தில் 220சிசி எஞ்சினுக்கு பதிலாக புதிய 250சிசி க்ரூஸர் பைக் மாடலை பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 2, 2019, 18:15 [IST]
English summary
Bajaj Auto will soon be launching the Avenger 160 in the Indian market. The Bajaj Avenger 160 is a result of tighter emissions regulations and the BS-VI emissions norms that are set to be put in place next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+