பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

பல சிறப்பம்சங்களுடன் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து கடந்த அக்டோபர் சேத்தக் பெயரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் டெலிவரியை துவங்காத இந்த ஸ்கூட்டர் தற்சமயம் தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

அந்த வகையில் தற்போது சிவப்பு மற்றும் மெட்டாலிக் சில்வர் என இரு நிறங்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான எரிபொருள் என்ஜின் ஸ்கூட்டர்களில் இருந்து இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வேறுப்படுத்தி காட்டுவதற்காக பஜாஜ் நிறுவனம் கவனமாக பணியாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4kWh மோட்டார் மற்றும் ஐபி-67 சான்றிதழ் பெற்ற, ஸ்கூட்டரில் இருந்து நகர்த்த முடியாத லித்தியம்-இரும்பு பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்போர்ட் மோடில் 85 கிமீ தூரமும், ஈக்கோ மோட்டில் 95 கிமீ தூரமும் பயணிக்க முடியும்.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

மென்மையாக தொட்டாலே ஸ்டார்ட்டாகும் கியர், எல்இடி லைட்டிங், முழுவதும் டிஜிட்டல் மயத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் கண்ட்ரோல் போன்றவை சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளதால், பஜாஜ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரை ப்ரீமியம் தயாரிப்பு நிலையில் வைத்துள்ளது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

இந்த ஸ்கூட்டர் 15,000 கிமீ வரையிலும், பொருத்தப்பட்டுள்ள பேட்டரி 50,000 கிமீ அல்லது மூன்று வருடம் (எது முதலில் வருகிறதோ) வரையிலும் பயன்படுத்தப்பட்ட பின்னரே சர்வீஸுக்கு எடுத்து கொள்ளப்படும் என ஏற்கனவே பஜாஜ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த சர்வீஸ் கால அளவு குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

ப்ரீமியம் பிரிவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.1.40 லட்சம் வரையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே கூறியதுபோல் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரிகள் அடுத்த மாதத்தில் இருந்து துவங்கவுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

மேலும் இந்த லக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சேத்தக் எலக்ட்ரிக் யாத்ரா என்கிற பயணத்திலும் ஈடுப்படுத்தப்பட்டது. சுமார் 3,000 கிலோமீட்டரை 20 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சுற்றி வந்தன. இந்த யாத்ரா குறித்த விரிவான தகவல்களை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சோதனை ஓட்டம்...

பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எவ்வாறு சோதனை செய்தது என்பதற்கான தகவல் எதுவும் வெளியாகவில்லை. புனேவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் சகான் தொழிற்சாலையில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பில் பெண்களும் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2019, 17:17 [IST]
English summary
Spy Pics: Bajaj Chetak Electric Scooter Spotted Testing Ahead Of January Launch
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+