பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அண்மையில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. தனது பழைய சேத்தக் ஸ்கூட்டர் பெயரிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு மிக அழகாகவும், சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருப்பதால், இந்த ஸ்கூட்டர் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

இந்த சூழலில், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, துவக்கத்தில் கேடிஎம் நிறுவனத்தின் பைக் ஷோரூம்கள் வாயிலாக இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு செல்லவும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

அதாவது, இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.30 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த பட்ஜெட்டில் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்குவதற்காக இந்த முடிவை பஜாஜ் ஆட்டோ எடுத்துள்ளதாக தெரிகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

முதல்கட்டமாக புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வருகிறது. படிப்படியாக நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி இன்டிகேட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரில் 4kW மின் மோட்டார் உள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும் ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகளை பொறுத்து செயல்திறனை மாற்றிக் கொள்ளலாம்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து ஈக்கோ மோடில் வைத்து இயக்கும்போது 95 கிமீ பயண தூரத்தையும், ஸ்போர்ட் மோடில் வைத்து இயக்கும்போது 85 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பையும் இந்த ஸ்கூட்டர் வழங்கும். ஆனால், இந்த ஸ்கூட்டரின் பேட்டரி திறன் மற்றும் அதிபட்ச வேகம் உள்ளிட்டத் தகவல்களை பஜாஜ் ஆட்டோ வெளியிடவில்லை.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் சிங்கிள் சைடு ஆர்ம் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. 12 அங்குல அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறித்து புதிய தகவல்!

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரியில் இருந்து டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும். கேடிஎம் அல்லது பஜாஜ் புரோபைக்கிங் ஷோரூம்கள் வாயிலாக வாங்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Source: Autocarindia

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்றே, இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியுள்ள புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலடி எடுத்து வைத்தது. அந்நிறுவனத்தின் ஹெக்டர் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதுதான் எம்ஜி நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் மாடல் ஆகும்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

எஸ்யூவி ரக காரான எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை வழங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக எம்ஜி மோட்டார் நிறுவனம் இஸட்எஸ் (MG ZS EV) காரை இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு இதுதான்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

இதுவும் எஸ்யூவி ரக கார்தான். ஆனால் இது எலெக்ட்ரிக் எஸ்யூவி கார். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன. எனவே எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

இதில், இங்கிலாந்து, தாய்லாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் மிகவும் முக்கியமானவை. இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அனேகமாக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

அதற்கு முன்னதாக, இந்திய மார்க்கெட்டிற்கான எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாக எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த தகவல் இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை தற்போது இன்னும் அதிகரித்துள்ளது.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

இந்திய மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியிடவுள்ளது. எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் நீளம் 4,314 மிமீ, அகலம் 1,809 மிமீ, உயரம் 1,620 மிமீ. இதன் மூலம் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை காட்டிலும், எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் பெரியதாக இருக்கும்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 150 எச்பி எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 44.5kWh லித்தியம்-அயான் பேட்டரியை எம்ஜி நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7kW ஏசி சார்ஜரை பயன்படுத்தினால், முழுமையாக சார்ஜ் ஏற 7 மணி நேரம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் 50kW ஃபாஸ்ட் டிசி சார்ஜரை பயன்படுத்தினால், 40 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் ஏறி விடும்.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, ஐதராபாத், பெங்களூர் மற்றும் அகமதாபாத் ஆகிய 5 நகரங்களில் மட்டுமே ஆரம்பத்தில் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு அதன்பின்பே விற்பனை விரிவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியர்களின் ஆவலை தூண்டியுள்ள எலெக்ட்ரிக் கார் குறித்த புதிய தகவல்

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 20 முதல் 22 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போட்டியாளரான ஹூண்டாய் கோனா கார் 23.71 லட்ச ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்து எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, October 26, 2019, 12:27 [IST]
English summary
According to report, Bajaj Chetak electric scooter will be initially sold through KTM dealerships.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+