மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்கும் வகையிலான புதிய மாடல் பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் எனும் காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் (CBS- Combi Braking System), 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் எனும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டமும் (ABS- Anti-lock Braking System) இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வாகனங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயம் செய்து வருகிறது. இதன் காரணமாகதான் டூவீலர்களில் சிபிஎஸ், ஏபிஎஸ் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

எனவே இந்தியாவில் இனி சிபிஎஸ், ஏபிஎஸ் இல்லாத இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய முடியாது. இதனால் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும், மத்திய அரசின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் தங்கள் மாடல்களை அப்டேட் செய்து வருகின்றன. இந்த வரிசையில் தற்போது அப்டேட் செய்யப்பட்ட பஜாஜ் சிடி 100 (CT 100) மற்றும் டிஸ்கவர் 125 (Discover 125) சிபிஎஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

2019 பஜாஜ் சிடி 100 பைக்கானது, ஸ்போக் வீல்ஸ், அலாய் வீல்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் உடனான அலாய் வீல்ஸ் என மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில், 99.3 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.08 பிஎச்பி பவர் மற்றும் 8.05 என்எம் டார்க் திறனை வழங்கும். அதே நேரத்தில் சிடி 100 பைக்கின் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வெர்ஷனில், 102 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

பஜாஜ் சிடி 100 சிபிஎஸ் பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் விலை 33,152 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இதன் அலாய் வீல்ஸ் வெர்ஷனின் விலை 35,936 ரூபாய் ஆகும். எலெக்ட்ரிக் ஸ்டார்ட் உடனான அலாய் வீல்ஸ் வேரியண்ட்டின் விலை 41,587 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

அதே நேரத்தில் பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்கானது ட்ரம் மற்றும் டிஸ்க் என வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், டிஸ்கவர் 125 பைக்கின் ட்ரம் வேரியண்ட்டின் விலை 58,003 ரூபாய். டிஸ்க் வேரியண்ட்டின் விலை 61,504 ரூபாய். இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த 2 வேரியண்ட்களும் தற்போது சிபிஎஸ் அப்டேட்டை பெற்றுள்ளன.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

பஜாஜ் டிஸ்கவர் 125 பைக்கில், 124.4 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11 பிஎச்பி பவர் மற்றும் 11 என்எம் டார்க் திறனை வழங்கும். இதில், 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவிற்கு கீழ்படிந்தது பஜாஜ்... இந்த மாற்றங்களுடன் புதிய மாடல் பைக்குகள் அறிமுகம்

விலை விபரம்:

சிடி 100 சிபிஎஸ்

சிடி 100 சிபிஎஸ் (ஸ்போக்)- ரூ.33,152

சிடி 100 சிபிஎஸ் (அலாய்)- ரூ.35,936

சிடி 100 சிபிஎஸ் (அலாய், எலெக்ட்ரிக் ஸ்டார்ட்)- ரூ.41,587

டிஸ்கவர் 125 சிபிஎஸ்

டிஸ்கவர் 125 (ட்ரம்)- ரூ.58,003

டிஸ்கவர் 125 (டிஸ்க்)- ரூ.61,504

இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 3, 2019, 17:57 [IST]
English summary
Bajaj CT 100, Discover 125 CBS Launched In India: Price, Features. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+