புதிய பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம்!
பட்ஜெட் பைக் மாடல்களில் பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக எரிபொருள் சிக்கனம் தரும் மாடலாக இருப்பதால், ஊரகப் பகுதி வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலா
புதிய பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் பைக் மாடல்களில் பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. போட்டியாளர்களைவிட மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனம் தரும் மாடலாக இருப்பதால், ஊரகப் பகுதி வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் 125சிசி திறனுக்கும் கீழான மாடல்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், 125சிசி திறனுக்கும் மேலான பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. அதன்படி, பஜாஜ் டிஸ்கவர் 110 பைக்கில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இதன்மூலமாக, இருசக்கரங்களின் பிரேக்குகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும். இருசக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் திறன் செலுத்தப்படுவதால், திடீரென பிரேக் பிடிக்கும் வண்டி சறுக்குவதையும், நிலைகுலைவதையும் ஓரளவு இந்த சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் தவிர்க்கும்.

சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்ட பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் ரூ.52,273 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். சாதாரண மாடலைவிட ரூ.563 மட்டுமே கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இந்த பைக்கில் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் 115.45 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.6 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய பஜாஜ் டிஸ்கவர் 110 பைக் மாடலானது ஹீரோ பேஷன் புரோ 110, டிவிஎஸ் விக்டர் 110 மற்றும் ஹோண்டா சிடி110 ட்ரீம் டிஎல்எக்ஸ் ஆகிய பைக் மாடல்களுடன் போட்டி போடுகிறது. அடுத்த சில வாரங்களில் இந்த பைக்கின் டெலிவிரி துவங்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








