ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

ராயல் என்பீல்டின் கதையை முடிக்கும் வகையில், புதிய மோட்டார் சைக்கிள் ஒன்று களமிறங்கவுள்ளது. மலிவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் கடந்த ஒரு தசாப்தத்தில், அதாவது கடந்த 10 ஆண்டுகளில், ஏராளமான மாற்றங்களை சந்தித்து விட்டது. முன்பெல்லாம் பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க வேண்டுமென்றால், எரிபொருள் சிக்கனத்திற்குதான் வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

அதாவது மைலேஜ். எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்? என்பதே வாடிக்கையாளர்களின் முதல் கேள்வியாக இருக்கும். ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. தற்போது வாகனத்தின் சக்திக்குதான் வாடிக்கையாளர்கள் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

எனவே அதிக சக்தியை வெளிப்படுத்தும் பெர்ஃபார்மென்ஸ் ரக மோட்டார் சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டில் வெகு வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன. குறிப்பாக டிவின் சிலிண்டர் இன்ஜின் (Twin-cylinder Engine) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இந்திய மார்க்கெட்டில் தற்போது ராயல் என்பீல்டு மற்றும் கவாஸாகி ஆகிய இரண்டு நிறுவனங்களும், ஓரளவிற்கு குறைந்த விலையில், டிவின் சிலிண்டர் இன்ஜின் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகின்றன.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) ஆகிய இரண்டு டிவின் சிலிண்டர் மோட்டார் சைக்கிள்களை, ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

650 டிவின்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் இவ்விரு மோட்டார் சைக்கிள்களும், விற்பனையில் சக்கை போடு போட்டு வருகின்றன. எனவே 650 டிவின்ஸ் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மிக பிரம்மாண்டமான வெற்றி கிடைத்துள்ளது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இதனால் புதிய டிவின் சிலிண்டர் இன்ஜின் மோட்டார் சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய தகவல், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இந்தியாவின் பஜாஜ் மற்றும் கேடிஎம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து, புதிய டிவின் சிலிண்டர் மோட்டார் சைக்கிள் ஒன்றை, மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றன.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

தற்போது 500 சிசி டிவின் சிலிண்டர் இன்ஜினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என கேடிஎம் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டீஃபன் பீரர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஆட்டோ மேகஸினான ஸ்பீட்வீக்கிடம் அவர் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

விலை மலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய 500 சிசி டிவின் சிலிண்டர் இன்ஜின் பஜாஜ் நிறுவனத்தால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ராயல் என்பீல்டு மற்றும் கவாஸாகி ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

ஏற்கனவே ஜாவாவின் வருகையால், ராயல் என்பீல்டு நிறுவனம் கடும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டில் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

அதன்பின் ராயல் என்பீல்டு நிறுவனம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி என தொடர்ந்து 4 மாதங்களாக, ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இது ஜாவாவின் வருகைக்கு பின் நிகழ்ந்த மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான், பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் புதிய 500 சிசி டிவின் சிலிண்டர் இன்ஜின் மோட்டார் சைக்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இந்த மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகமானால், ராயல் என்பீல்டுக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனிடையே இந்த புதிய இன்ஜின் பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்களின் வேறு சில பைக்குகளில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

பஜாஜை போல் கேடிஎம் நிறுவனமும் இந்தியாவில் புகழ்பெற்றதாகதான் விளங்குகிறது. கேடிஎம் லைன் அப்பில் உள்ள ட்யூக் 125, ட்யூக் 200, ட்யூக் 250, ட்யூக் 390 மற்றும் ஃபுல்லி ஃபேர்டு (Fully Faired) மோட்டார் சைக்கிள்களான ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 ஆகியவை மிகவும் பிரபலமாக திகழ்கின்றன.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

கேடிஎம் நிறுவனம் தனது லைன் அப்பில் உள்ள அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை சமீபத்தில் வழங்கியது. வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாகவே கேடிஎம் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

125சிசி அல்லது அதற்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களிலும், பாதுகாப்பை முன்னிட்டு, ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியை வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவு வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

தற்போதைய நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் 2019 டோமினார் 400 மற்றும் கேடிஎம் நிறுவனத்தின் 390 அட்வென்ஜர் ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இதில், புதிய பஜாஜ் டோமினார் 400 மோட்டார் சைக்கிள் வெகு விரைவில் லான்ச் ஆகவுள்ளது. அதே சமயம் கேடிஎம் 390 அட்வென்ஜர் மோட்டார் சைக்கிள் வரும் அக்டோபர் மாதத்தில் லான்ச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டின் கதையை முடிக்க வரும் புதிய பைக் இதுதான்... மலிவான விலையால் எகிறும் எதிர்பார்ப்பு

இதனிடையே தற்போது இந்திய மார்க்கெட்டில், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிள் ரூ.2.50 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார் சைக்கிள் ரூ.2.65 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் பஜாஜ்-கேடிஎம் அறிமுகம் செய்யவுள்ள புதிய 500 சிசி டிவின் சிலிண்டர் இன்ஜின் மோட்டார் சைக்கிளின் விலை இதை விட குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NOTE: Images Used Are Only For Representational Purpose Only

Most Read Articles
English summary
Bajaj-KTM Will Launch 500cc Twin-cylinder Engine Motorcycle: Rival To Royal Enfield. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X